2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Therese Anthoniyapillai Packiyanathar
Age 87December 15, 1931 – January 1, 2019
- Born in
- Mandaitivu
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திரேஸ் அந்தோனியாப்பிள்ளை பாக்கியநாதர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா அம்மா எங்களை விட்டு
சென்று ஈராண்டு ஆனதோ
நொடியளவும் நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...
அம்மா கடலளவு பாசத்தை வைத்து
உன் கண் பார்வைக்குள் எங்களை
அன்பால் கட்டி வைத்தாய்- இன்று
கண்ணீருடன் நினைவலையை தந்து
விட்டுச் சென்று ஆண்டு இரண்டு
ஆனதம்மா...
அம்மா உன் நேசம் தேடி
இன்னும் கனத்த இதயத்துடன்
உன் சாந்த முகத்தின்- புன்னகை
சாரலின் நினைவுகளுடன்..
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம்
கணப்பொழுதும்
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா
பிரிவின் துயருடன் பிள்ளைகள்,
மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்!!
அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் 02-01-2021 சனிக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் 02ம் ஆண்டு நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

