Aruthal

மரண அறிவித்தல்

Photo of Thillainadaraja Jeyaratnaraja

In loving memory of

Thillainadaraja Jeyaratnaraja

Age 68February 12, 1949 – February 20, 2017

Born in
Thondaimanaru
Lived in
Valvettithurai, Mayiliddi, Kankesanthurai, Point Pedro Viyaparimoolai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தொண்டைமனாற்றைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, சங்குவத்தை மயிலிட்டி, மடத்துவளவு காங்கேசன்துறை(யாழ் தியட்டருக்கு முன்பாக) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா ஜெயரட்ணராஜா அவர்கள் 20-02-2017 திங்கட்கிழமை அன்று பருத்தித்துறை வியாபாரிமூலையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லைநடராஜா, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேல்வீதி மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை பொன்னம்மா மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பிஅய்யா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காமாட்சியம்மா(மாம்பழம்) அவர்களின் பெறாமகனும்,

ஜெயலட்சுமிதேவி(இராஜேஸ்வரி), ரஞ்சினிதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,

ஜெயந்தி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன்(ஜெகன்), சுரேஷஸ்குமார்(அர்ச்சுன்), மற்றும் சுகந்தி, சரவணபவன்(பவன்), லஷ்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலகரட்ணராஜா(குட்டிராசா- இந்தியா), குணரட்ணராஜா(குணக்கிளி), பாஸ்கராதேவி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வீமராஜா, இந்திராதேவி(குஞ்சா), சந்திரமோகன், ஜெயபவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயபாலசந்திரன்(அக்குட்டி) அவர்களின் அன்பு மைத்துனரும்,

கஜீபன்(கபில்), கஜிதா(விஜி), சுஜீபன், அர்ச்சனா, தமிழ்குமரன், அன்புக்குமரன், நிலாமதி, கபிசன், கபிசனா, அபிஷேகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
வீரபத்திரர் கோவிலடி,
வியாபாரிமூலை,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.