மரண அறிவித்தல்

In loving memory of
Thiruchelvam Yugarajah
December 12, 2015
- Born in
- Kokkuvil East
- Lived in
- Kondavil North East
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு வாகீஸ்வரி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வம் யுகராஜா அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் ஆனந்தி தம்பதிகளின் அன்பு சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பொற்கொடி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி பரஞ்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜேம்ஸ் றெஜீவன், ஸ்ரனிஸ் ஜெலீபன்(முகாமைத்துவ உதவியாளர், வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அலுவலகம்), டொறிஸ் ஸ்டீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு
தந்தையும்,
ஞானமலர், காலஞ்சென்ற பக்திநாதர், ஜேசுதாசன்(ஓய்வுபெற்ற சிரேஷ்ட முகாமையாளர் இலங்கை வங்கி), காலஞ்சென்ற நேசமலர், லில்லிமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிந்துஜா(ஆசிரியை- யாழ் வண்ணை நாவலர் மகா வித்தியாலயம்), கீர்த்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வராசா, அருள்மேரி, கௌசலா(இளைப்பாறிய தாதிய உத்தியோகத்தர்), காலஞ்சென்ற நேசராசா, குணசிங்கம், வர்ணகுலசிங்கம், காலஞ்சென்றவர்களான உதயகுமார், உருத்திரன், மற்றும் மனோகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விதுஷகான், ஜதுஷகான் ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 14-12-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் சிவன் புது வீதி என்னும் முகவரியில் இருந்து கோண்டாவில் வடக்கில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து சென்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் கிழக்கு புனித சின்னப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோண்டாவில் கிழக்கு கட்டை ஆலடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல - 50,
சிவன்புது வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

