1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thiruselvam Subathaasan
Age 31August 12, 1977 – January 15, 2009
- Born in
- Kili Vaddakachchi
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவட்டக்கச்சியைச் சேர்ந்த திருச்செல்வம் சுபதாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் வடிவமே அழகின் உருவமே
எங்கள் இதயமே எம் உயிர் தாசனே
இலட்சியத்தின் மைந்தனாய் இசையின் வித்தகனாய்
பார் போற்றும் பண்பாளனாய் உலகி்ற்கு உத்தமனாய்
பெற்றோர்க்கு பெருமாமகனாய் பெருமை சேர்த்த
எம் தாசனே
தாய்மடி தேடி தவித்துப் புலம்புதடா
தடுக்க வழியினறி தவிர்க்கின்றோம் நாம்
தன்மானமும் தமிழ் மண்னும் என்னிரண்டு
கண்ணென்றாய் கொண்ட கொள்கையில்
நின்ற எம் தாசை கொலையாள வந்தான் காலவன்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவன்ற உன் தாயின்
உண்மை மைந்தனாய் உணவூட்டி
பாசத்தால் அரவணைத்து பண்புடன் நீ பார்த்தாய்
இத்தவத்தை நாம் யாரும் செய்யவில்லை
என இயலாமல் துடிக்கின்றோம்
விழி வழியிரண்டும் உனைதேட
விடியலை தேடியா நீ சென்றாய்
காலம்தான் செல்லும் ஈழம்தான் வெல்லும்
என்ற கொள்கையின் வழியிலா நீ சென்றாய்
சுயநலம் உனக்கில்லை சுகம்
எதுவும் நீ கண்டதில்லை.
உன்பிரிவை தாங்கியே உடைந்துபோன உன் தந்தையும்
ஈர்நான்கு மாதத்தில் இறந்தே சேர்ந்தாரடா உன்னடி
எண்ணி எண்ணி தவிர்க்கின்றோம் ஏங்கி துடிக்கின்றோம்
ஓராண்டு சென்றாலும் உனை நினைக்கும் போதெல்லாம்
இதயமே வெடிக்குதையா
வானவில்லில் வர்ணம்போல் வசீகரத்தில் நம் தாசன்
வாழ்ந்த காலம் சிறிதடா, ஆற்றிய பணி பெரிதடா
நாட்டிற்காய் வீட்டிற்காய் பாதிபோட்டு
பணியாற்றிய நம் இனிய தாசனே.
துன்பத்தில் துவண்டு, துயரத்தில் ஆழ்ந்து,
சிந்தனையில் சிதைந்து கதறிப் புலம்புகின்றோம்.
உனைக்காண வழியின்றி எமைக்காண என்றோ
நீ வருவாயாடா என ஏங்கின்றோம்....
நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?
கலங்குகின்றோம் உன் குடும்பத்தார்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

