1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Thiruvarutchelvam Nageswari
Age 74January 27, 1945 – December 17, 2019
- Born in
- Suthumalai
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கந்தசாமி கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருவருட்செல்வம் நாகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உறவென்ற விருட்சம் ஒன்று உறங்கியது கண்டோம் அம்மா!
பிரிவென்ற பெருந்துயரம் வாட்டுது எம் உளத்தை!
துன்பம் வரும் வேளை எல்லாம் தூணாக நின்றீர்!
துவண்டு நாம் வீழாமல் காத்திருந்தீர்!
வாழ்வினில் எட்டாது வாழ வைத்த தெய்வமே!
வாடி மனம் தவிக்கின்றதே வாழ்ந்து நீங்கள் முடிந்ததனால்!
பாரினில் உமக்கென ஈடான உறவு நாம் பார்ப்பது இனி எப்போ?
இன்னமும் எம் மனக்கண் முன்னே நீங்கள் இனிமையாய் நிற்க
இன்னுயிர் பிரிந்து இமைகளை மூடித் தூங்கியதேனோ?
அகிலத்தில் அவலமுற்று அனாதியாய் நிலை தளர்ந்தோம் அம்மா!
அன்போடு ஆதரித்த அன்னையே ஆசிகள் தாரும் எமக்கு...!
மகிழ்வும் துயரும் பட்ட கணங்கள் மறையாது வாழ
நீர் மட்டும் மறைந்தது ஏனோ எம் அருமை அம்மாவே!
வாழ்ந்தது போதும் என்று நினைத்தோ
காலனின் கட்டளைக்கு கண்ணசைத்து சென்றீர்?
புன்னகை முகத்தோடு பவனி வரும் காட்சி
இன்னமும் உறைந்து இருக்கு எம் மனதோடு!
துயரோடு எமை விட்டு தூரமாய் சென்றீர் அம்மா
நினைவோடு என்றும் நீங்காது வாழ்வோம் நாம்!
தெய்வத்தின் திருவுருவே! எம் அன்னைக்கு
நன்றியின் சமர்ப்பணம் இதயத்தால் கோடி!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

