1ம் ஆண்டு நினைவஞ்சலி

Thiyageswary Sachchithananthan
Age 56
- Born in
- Punkuduthivu 11th Ward
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தியாகேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
பன்னிரு மாதங்கள் சென்றதம்மா!
என்ன நடந்தது ஏது நடந்தது என்று கணக்கிட்ட
நாட்கள் அதற்குள் ஆண்டு ஒன்று ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா!
அன்று எம்முடன் வாழ்ந்து மறைந்தீர்கள்
இன்று எம்முடன் மறைந்து வாழ்கின்றீர்கள்.
பிறப்பு, இறப்பு இணைந்தது எனினும்
இழப்பினை நெஞ்சம் ஏற்பதில்லையம்மா!
இந்த உடலும் உயிரும் உங்களது என்றாலும்
கண்ணீரும் கவலைகளும் எங்களது ஆகிற்றே!
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல
நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மனின்
பாதார விந்தங்களில்
நித்திய சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
‘ஆன்மா என்றென்றும் அழியாது’
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!!
தினம் தினம் உங்கள் பிரிவு துயரால் துயருறும்கணவன், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

