மரண அறிவித்தல்

In loving memory of
Umathevi Sellathurai
Age 85December 11, 1935 – March 9, 2021
- Born in
- Sarasalai South
- Lived in
- Sarasalai, Colombo, Varani
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரசாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சரசாலை, கொழும்பு, வரணி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி செல்வத்துரை அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று வரணியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா வாத்தியார் லக்ஷ்மிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிறீஸ்கந்தராஜா(கனடா), தேவவதனி(Rtd Teacher- Varany Maha Vidyalayam), மலர்விழி(கனடா) , குகதாசன், உருத்திரப்பிரியா, ரதிப்பிரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தராணி(கனடா), நாகதேவன்(Rtd GS), நாகேஸ்வரன்(கனடா), ரவிதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம்- வேலுப்பிள்ளை, ஏரம்பமூர்த்தி- செல்லம்மா, சின்னத்துரை- பொன்னம்மா, K.R நடராசா ஆகியோரின் மைத்துனியும்,
சரஸ்வதி அவர்களின் உடன் பிறவாச் சகோதரியும்,
சரண்யா(கனடா), ராஐ்வத்சன்(கனடா), தாட்ஷாயினி- நிஷான்(HSBC Colombo), மயூரி(Teacher- Sivapathakalayakam, Kilinochchi), ஷாம்பவி(Teacher- Thiruvaiyaru Maha Vidyalayam- Kilinochchi), சேய்ந்தன்(கனடா), உமையாள்(கனடா), லக்ஷ்மி(கனடா), சுரேஷ்பாபு- துவாரகா(கனடா), நிஷாந்தன்- ரோகினி(கனடா, கொழும்பு), சாந்தரூபன்(பிரான்ஸ்), சகத்திரன்(WNS- கொழும்பு), பிரியந்த்- அபிராமி, பிரசாந்தி- பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹரிணி, தனுஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வரணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

