31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Vaarithambi Ponnuthurai
Age 71November 28, 1938 – December 2, 2009
- Born in
- Avarangal
- Lived in
- Avarangal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஆவரங்காலை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட வாரி்த்தம்பி பொன்னுத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் அவர்களின் வீட்டுக்கிரிகை 30.12.2009 புதன்கிழமையும், சவிண்டி 03.01.2010 ஞாயிற்றுக்கிழமை அன்றும் ஆவரங்காலில் அவரது இல்லத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
பாசமுள்ள அப்பாவிற்கு பாசத்துடன் எழுதுகின்றோம்
நிலையற்ற வாழ்வில்
நிறைவாய் வாழ்ந்து - எம்மையும்
மகிழ்வித்து, எம்மோடு கூடிக்குழாவி - நாம்
எதிர்பாராத தருணத்தில் எம்மனங்கள் திகைத்திட
கார்த்திகை பூரணை திதிதனில் ஆண்டவன் அடிசென்று
மாதமொன்று ஆகுதப்பா, ஆறவில்லை எங்கள் மனம்
ஓயவில்லை எங்கள் அழுகை, நித்தமும் உங்களை
நினைத்து, மீளாத்துயரோடும் நீங்காத
நினைவுகளுடனும் வாழ்கின்றோம்.
அன்புடன் எம்மைப்பெற்று..........
ஆசையுடன் எம்மை வளர்த்து...............
இன்பமுடன் நாமிருக்க....................
எம்மைவிட்டு இறைவனடி சென்றதேனோ?
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன
"அப்பா" என்ற உறவுக்கு நிகர் இப்பாரினில்.......... யார்?
கடந்த 02.12.2009 அன்று இறைவனடி சேர்ந்த எமது பாசமிகு தந்தையின் பிரிவை அறிந்து எமது துயரில் பங்கேற்று எமக்கு உறுதுணையாகவும், பக்கபலமாகவும் நின்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

