1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vaiththilingam Thivviyananthan
Age 62May 7, 1955 – October 16, 2017
- Born in
- Punkuduthivu 11th Ward
- Lived in
- Pungudutivu 2nd Ward, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் திவ்வியானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவு
அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே
நீங்கள் பிரிந்து
ஒரு வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள்
பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே
ஓராண்டு கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது.
நீங்கள் இல்லாத உலகம்
நிம்மதி இழந்து தவிக்க
போகும் பாதைகள் புரியாமல்
நித்தமும் நினைக்கையில்
கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து
பாயிது அப்பா.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்.
மனைவி, மக்கள், மருமகள், பேரப்பிள்ளை, சகோதரர்கள், உறவினர்கள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

