8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaithy Kanapathippillai
Age 82
- Born in
- Mandaitivu
- Lived in
- Mandaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எழுதும் வரியாவும் இவ்வாண்டு- உமது
எட்டாம் ஆண்டொன்று நினைவுபடுத்துகிறது
ஐயா
காலம் கடந்தாலும் கடக்க முடியவில்லை
உம் நினைவுகளை- ஐயா
உம் வழி கொண்டு
உலகை அறிந்தோம்- இன்று
எம் கண்வழி கண்ணீராய்
உமை உணர்கின்றோம்- ஐயா
குடும்பத்தின் தளைச்சுடரே
நீர் அணைந்து
இந்த குடும்பத்தை
இருள் மயமாக்கிவிட்டீரே
உம் அன்பொளிக்கு- நிகர்
இங்கு எவ்வொளியும் இல்லை- ஐயா
இன்றும் அல்ல என்றும்
நீர் இல்லாத்துயர்- மனதை
சூழ்ந்து கொண்டுதான் இருக்கும்- ஐயா
இன்றும் உம் உடல் பிரிந்து சென்றாலும்
உம் ஆசீர்வாதம்
எம்முடன் இருக்குமென
மனச்சாந்தி கொண்டு
உம் பாதத்திற்கு
மலர்ச் சாந்தி செலுத்துக்கின்றோம்
ஐயா....
தகவல்- க.கண்ணதாசன்(சுவிஸ் Burgdorf), க.அகிலன்(நோர்வே Oslo)
— மகன்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

