Aruthal

நினைவஞ்சலி

Photo of vallinayaki Ramalingam

In loving memory of

vallinayaki Ramalingam

September 15, 2016

Born in
Kangesanthurai
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

அன்னார், முக்கந்தர் சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

காலஞ்சென்ற இராமலிங்கம்(தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. சசிகலா, கலாவாணி, துளசிராம், மேஜர். துளசி(குகபாலிகா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தில்லைநாயகி(இலங்கை), கோகுலநாயகி(மலேசியா), அகிலாண்டநாயகி(பிரித்தானியா), விமலநாயகி(இலங்கை), நவநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. செந்தில்வால், பாலச்சந்திரன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குணநாயகம், சிவசுப்பிரமணியம், மற்றும் யெயபாலன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவகுருநாதபிள்ளை, சியாமா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Dr. சயன், சரணியன், றோசாந், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

பெற்றோர் பெருமைப்படும் புதல்வியாய், அன்புமிக்க மனைவியாய்,
பாசமுள்ள அம்மாவாய், கடமையுணர்வுள்ள ஆசிரியையாய்,
மாணவர்கட்கு வழிகாட்டியாய், மேடைப் பேச்சாளராய்,
எழுத்தாளராய், நாடக நடிகராய், சமூக சேவையாளராய்,
நல்லதொரு மாமியாய், பாசமிகு பேத்தியாய் வாழ்ந்து
வரலாற்றில் இடம் பிடித்தீர்

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி, குறுஞ்செய்தி, முகப்புத்தகம் மூலமாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும், அவரது இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளில் உதவிகள் புரிந்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது அந்தியோட்டிக்கிரியை 12-11-2016 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 12:00 மணிவரை Scarborough Sri Ayyappan Temple, 635 Middlefield Rd, Scarborough, ON M1V 5B8, Canada என்னும் முகவரியில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · September 16, 2016மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.