நினைவஞ்சலி

In loving memory of
Vallipuram Balasingam
Age 60December 25, 1930 – December 21, 1991
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Pungudutivu 10th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் பாலசிங்கம் அவர்களின் 29ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடு எமை அரவணைத்து
அறிவுரைகள் பல புகட்டி
கட்டுப்பாடும் கண்ணியமும்
கற்றுக் கொடுத்து - அறநெறியில்
நாம் வாழ வழிகாட்டிய எம் தெய்வமே
பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோரின்
கடமை என்பதையும் மீறி உங்கள் எல்லையற்ற
அன்பால் அரவணைப்பால் எங்களைச் சிறப்புற
வாழவைத்து அதைப் பார்த்து மகிழாமல்
பாதியில் சென்றுவிட்டீர் !
நிஜமான உங்களை எங்கள் அருகில் வைத்து
வாழ ஆசைப்படுகிறோம்
ஆனால் நீங்கள் நிழலைக்கூடத் தராமல்
நினைவுகளைத்தான் தந்துவிட்டுச் சென்றுள்ளீர் !
எங்கள் இதயங்கள் என்றுமே
நீங்கள் குடியிருக்கும் கோயிலப்பா
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

