Aruthal

மரண அறிவித்தல்

Photo of Varithambi Nanthakumar

In loving memory of

Varithambi Nanthakumar

Age 32June 11, 1983 – January 11, 2016

Born in
Aliyavalai
Lived in
Mullai Ampalavanpokkanai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆழியவளை கொடுக்குளாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாகவும் கொண்ட வாரித்தம்பி நந்தகுமார் அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வாரித்தம்பி, காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், குணரட்னம் மங்கையற்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கலைச்செல்வி(நித்தியா) அவர்களின் பாசமிகு கணவரும்,

பவனுசன், பவித்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, சுமதி, காலஞ்சென்ற குட்டி, மோகன், மாவீரர் சலீம்(மதன்), சிறோ, மேனகா(ஜெர்மனி), சிவாக்குட்டி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நதியா, நகுலேஸ், குட்டி, சுவேதினி(மாவட்ட வைத்தியசாலை- யாழ்ப்பாணம்), பாலதீபன், றோகினி(ஆசிரியை- ஆழியவளை பாடசாலை), சிந்தன், நிதன், சர்மி(ஜெர்மன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தவச்செல்வி(லண்டன்), சதீஸ்வரன்(வரன்), நடராசா, பாலச்சந்திரன், உதயேஸ்வரன், குணசுந்தரி, ஜனனி, தமிழ்மாறன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவம்(லண்டன்) அவர்களின் அன்புச் சகலனும்,

நிதுர்சிகா, ஆகாஸ், யுவறாஜ், காலஞ்சென்ற யுனேஜ், யுவேஜ், தர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பலவன் பொக்கணை இந்து மாயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.