நினைவஞ்சலி

In loving memory of
Veeluppillai Muththukumar
Age 66July 27, 1942 – February 2, 2009
- Born in
- Pungudutivu
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை முத்துக்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
வானத்துச் சூரியனே
வசந்தத்தின் இருப்பிடமே - என்
வாழ்க்கைத் துணைவனே
காலங்கள் உருண்டோட
கனிவாக நாம் வாழ்கையிலே - என்
வாழ்வின் இறுதிவரை வருவீர்கள் என நினைத்தேன்
காலனவன் விதி வலைக்குள் சதிவலையாய்
காரிருளில் எனைக் கைவிட்டுப் போனதுமேன்
கைப்பிடித்த நாள் முதலாய்
கண்கலங்கி நான் நின்றதில்லை - இன்று என்
பதியிழந்து மதிகலங்கி நிற்கின்றேன்
என் பகலவன் எங்கே என...!
அன்பான எங்கள் அப்பாவே
பாசமாக எமை வளர்த்து
பண்பான பல கலைகள் கற்பித்து - இன்று
பல மைல்களுக்கப்பால் நாம் இருக்க
பறந்தோடி இங்கு வந்து பார்த்திடுவீர்கள் என நினைத்தோம்
பாதியிலே எமைப் பரிதவிக்க விட்டுப் போனதுமேன்
வந்து பார்ப்பதற்கும் வழியேதுமில்லா பாவிகளாய்
நொந்து போய்விட்டோம் அப்பா...!
நேரில் நான் பார்த்ததில்லை
நெருங்கிவந்து பேசவில்லை
தொலைதூரம் நானிருந்து
தொலைபேசியில் கதைக்கையிலே - உங்கள்
ஒலித்த குரல் இன்னும் ஓயவில்லை - மாமா
ஓய்ந்ததுவோ உங்கள் உடல்..!
என் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
வந்துதித்த - அன்பு
மூத்த மருமகனே உமை நினைக்கையிலே - என்னுள்ளம்
குமுறுதையா
ஆண்டுகள் சென்றாலும் ஆறிடுமோ
எம்உள்ளம் ஆசை மருமகனே...!
அப்பாவின் துயரில் பங்கேற்ற அனைவருக்கும் எங்கள் அன்பான நன்றிகளைத் தெரிவிப்பதுடன், அவரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம்வல்ல நயினை நாகபூசணி அம்மனை வேண்டிக்கொள்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், மாமன்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

