மரண அறிவித்தல்

In loving memory of
Veeravaku Joel Rajasingam
Age 67April 27, 1951 – March 23, 2019
- Born in
- Uduppiddy
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolence"வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்
இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம்
ஆகவே, வாழ்ந்தாலும் இறந்தாலும்
நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம்"
உரோமையர் 14:08
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு யோவேல் இராஜசிங்கம் அவர்கள் 23-03-2019 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமுவேல் பொன்னையா வீரவாகு மேபல் நேசரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், யோசேப் இராஜசிங்கம் லூயிஸ் இராசமணி இராஜசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜவினோதினி அவர்களின் அன்புக் கணவரும்,
யூலியான், ஜெனீபர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கவிதா இராஜசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாயா இராஜசிங்கம் அவர்களின் அன்பு அப்பப்பாவும்,
அருட்திரு. V.N தர்மகுலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான V.G கனகசிங்கம், V.G பாலசிங்கம், எலிசபேத் ஜெயராணி, ஜோய்ஸ் அதிசயராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அன்ரன் இராஜகுமார்(கனடா), இராஜவிதாரணி(டென்மார்க்), இராஜசுகந்தினி(அவுஸ்திரேலியா), இராஜமொகாந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

