1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vellupplai Kandasamy
November 13, 2015
- Born in
- Mayiliddi South
- Lived in
- Dillenburg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dillenburg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா
பாசமாய் வளர்த்து பாரினிலே போற்ற
வழி காட்டினீர்கள் எமதருமை அப்பா
முதலாம் ஆண்டு அல்ல பலயுகம் கடந்தாலும்
ஏதோ வொன்றாய் உனது ஞாபகம் அப்பா
முன்னோக்கி ஓடுகின்ற நினைவுகளை நிறுத்த அப்பா
உங்களை மறந்தால் தான் நினைப்பதற்கு
உங்கள் அன்பு முகம் தேடும் உதிரங்கள்.
உழைத்துக் களைத்த உன் கை கால்களை மிதிக்கச் சொல்வாய்...
அறியாத வயதில் மிதித்ததை நினைத்து இதயம் வலிக்குதப்பா!
இப்போதென்றால் முத்தம் வைத்திருப்பேன்!
எங்களுடைய வெற்றிகளுக்குப் பின்னால் நீ இருக்கிறாய்!
தோல்விகளுக்குப் பின்னால் உன் தோள் இருக்கிறது!
மறக்க முடியவில்லை!!
ஆறுதல் கூற நாம் இருந்தும் ஆறவில்லை அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
தினமும் பிரார்த்திக்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனை 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Tagessteatte Hintersand, Am Hintersand 15, 35745 Herborn, Germany எனும் முகவரியில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

