10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Velupillai Yoganathan
Age 62May 19, 1948 – November 22, 2010
- Born in
- Chavakachcheri
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை யோகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே பாசத்தின் பிறப்பிடமே
எம்மை விட்டகன்று ஒரு சகாப்தம்
ஆயினும் உங்கள் நினைவுகள் எமக்கு பல சகாப்தம்...
பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!
பத்து வருடம் ஆகியும் பத்து நிமிடம்
கூட உங்களை மறக்க முடிய வில்லை
எத்தனை உறவுகள் பல வந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதை விட்டு விலகாது.
பத்தென்ன பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும் - எம்மை
பாசத்தின் சுமையோடு அரவணைத்துக் காத்த - எமது
அன்புத் தெய்வமே அப்பா உங்கள் நினைவலைகள் என்றும்
எம் நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்.
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

