கண்ணீர் அஞ்சலி

In loving memory of
Vengadasalam Nagarajan
Age 44May 16, 1966 – September 28, 2010
- Born in
- India
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியாவைப் பிறப்பிடமாகவும் இலண்டனில் வாழ்ந்து, சுவிசை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குற்றாலம் வெங்கடாசலம் நாகராஜன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
நெஞ்சம் பரந்து நேர்மையில் விரிந்திட்ட – எம்
கலையின் உருவே கலைதந்த மாமணியே
அரிதாய் கலைசெய்தீர் கலையாய் விரிந்திட்டீர்
கற்பனையில் கடல்போல் கம்பனை வென்றிட்டீர்
கல்வி கொடுப்பதிலே வித்தகராய் திகழ்ந்தவரே
கலையின் பொக்கிசமே எங்கள் குற்றாலராஜனே
உம் பிரிவுத்துயர் அறிந்து துடியாய் துடிக்கின்றோம்.
ஆண்டவன் அடியிற்கு அர்ச்சனை மலராக்கிவிட
கண்கெட்ட காலனவன் கடுகதியில் ஏன் அழைத்தான்?
கலங்கி கதியிழந்து கதியற்று நிற்கின்றோம்.
ஒரு நொடியில் மறைந்து விடும் நீர்க்குமிழியைப்போல்
உயிர்க்குருவி கூட்டைவிட்டுப் பறந்ததேனோ
பொய்யாதோ வாக்கு என்று
உற்றோரும் மற்றோரும் காத்திருக்க
எம்மை மறந்து நெடுந்தூரம் ஏன் சென்றீர்
பொது நலமே வாழ்க்கையென்றீர் - இன்று
உம் குடும்பம் இருட்டறையில்
இதயத்தை வெறுமையாக்கி வேதனையில் துடிக்கிறதே
யார் வருவார்.....இனி துயர் துடைக்க
காலம் கடியது காலன் கொடியவன்
கலங்கித்துடிக்கும் நெஞ்சங்களுக்கு
எங்கள் கண்ணீர்ப் பூக்களால் காணிக்கை செய்கிறோம்.
கண்ணீர்ப் பூக்களை காணிக்கை செய்யும்
ஜெயக்குமார் குடும்பம்
ஆசிரியை நிமலினி
மாணவர்கள், பெற்றோர்கள்
கலா நிகேதன் நடனாலயம்
(பாசல்)
சிறிதரன் குடும்பம், ஆசிரியை கிருஸ்ணபவானி
மாணவர்கள்
— கலைக்கோவில் ஆடற்கலையகம் - சுவிஸ் - சுக்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

