நினைவஞ்சலி

In loving memory of
Vijayaluxmy Selvaratnam
Age 77August 18, 1943 – December 10, 2020
- Born in
- யாழ் கோப்பாய் தெற்கு
- Lived in
- Kalviyangadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் தெற்கு கொங்கமையைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு GPS விளையாட்டரங்க வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயலட்சுமி செல்வரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
“தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை
அன்னையை மிஞ்சிய தெய்வமும் இல்லை”
அன்பெனும் சொல்லின் அளவுகோல் நீ அம்மா!
உணவைத் தினமும் ஊட்டி உணர்வைப் பருக்கினாய்
உடலுள் வைத்து உயிரைக் காத்து
உலகில் என்னை உயரச் செய்தாய் அம்மா!
வாழ்க்கையின் நியதி நிறைவுறும் எல்லை
அவன் விதிப்படியே இறையடி சென்றாய் அம்மா!
எம்முயிர் நிலைக்கும் வரை உம் நினைவு
எம் நெஞ்சில் நிலைத்திருக்கும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

