1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Vijayaratnam Suthakaran
Age 49August 12, 1967 – August 9, 2017
- Born in
- Irupalai
- Lived in
- Denmark
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Ølsted ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜயரட்ணம் சுதாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று அகன்றோடி
விட்டது ஆனாலும் உங்கள்
நினைவுகள் அழியாது
என் அடிமனதின் ஆழத்தில்
உன் நிஜங்கள் நீண்டு
நிழலாடுகிறது!
எங்கே சென்றாலும்
எதை பார்த்தாலும்
உன் முகமே என்முன்னால்
எதையும் மறக்க முடியாது
அழிக்க முடியாது
தவியாய் தவிக்கிறேன்
மணம் முடித்து கூட்டிவந்தாய்
டென்மார்க்!
மகிழ்ச்சியை அள்ளித்தந்தாய்
மழலைகள் மலர்ந்து வளர்ந்து சிறந்து
சீரான சிறப்பான வாழ்வை
தந்தாய்!
இன்று இடையிலே என்னை
விட்டு ஏனய்யா சென்றாய்..!!
முத்தான மூன்று செல்வங்களை
பெற்று வற்றாத மகிழ்ச்சியை
தந்த என்னுயிர் சுதாவே,
நீ
இந்த நிலையில் எம்மைவிட்டு
ஏன் சென்றாய்!
மாலைதீவினில் சோலையாய்
கூடி நின்று
கொண்டாடி குதூகலிக்க
கண்களை மூடினாயே
தாங்குமா நெஞ்சம்!!
தஞ்சம் அடைய உன் நெஞ்சமின்றி
நான் தவிப்பது உனக்கு
தெரிகிறதா!
அப்பா நீண்டவிடுமுறைக்கு
எமை அழைத்து ,நீங்கள்
நீண்டதூரம் சென்றது
நியாயமா!!
நீங்கள் கூட்டிச்சென்ற இடங்கள்
நீங்கள் பேசிய வார்த்தைகள்
நீங்கள் கற்றுத்தந்த பாடங்கள்
நீங்கள் காட்டிய வழிகள்
எல்லாம் கண்கள் முன்னே
கண்ணீரில் மிதக்கிறது அப்பா
உங்கள் பாசத்தை உங்கள் பரிவை
இனி நாங்கள்
காணவே முடியாதா அப்பா
ஏன் எதற்கு எம்மை விட்டு
சென்றீர்கள் !
வாருங்கள் அப்பா
எங்களை பாருங்கள் அப்பா
எங்களுக்கு வழிகாட்டுங்கள்
அப்பா!!
உங்கள் நினைவு என்றும் அழியாது
உங்கள் பிரிவை எங்களால்
தாங்க முடியாது
என்றென்றும் உங்கள்
நினைவுடனே
மனைவி பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

