மரண அறிவித்தல்

In loving memory of
Vishvalingam Nagammah
Age 88February 20, 1929 – May 1, 2017
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Kili Uruththirapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் நாகம்மா அவர்கள் 01-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ராமநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராமலிங்கம்(ஓய்வுபெற்ற பொது முகாமையாளர்- கூட்டுறவுச் சங்கம், கிளிநொச்சி) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, செல்லம்மா, தர்மலிங்கம், தையல்நாயகி மற்றும் சோமசுந்தரம்(சோமு), வசந்தமலர்(வசந்தா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, கந்தசாமி, கந்தசாமி, காமாட்சி, மருதலிங்கம் மற்றும் கலாதேவி(கோமளம்), வரதலட்சுமி(கிளி), தங்கம்மா, கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்பு சகலியும்,
தயானந்தன்(லண்டன்), தயாளினி(பிரான்ஸ்), சதானந்தன்(ஆசிரியர்- கிளி. யூனியன் குளம் அ.த.க பாடசாலை), ஜெயானந்தன்(லண்டன்), காலஞ்சென்ற விஐயானந்தன்(ஆசிரியர்), பகீரதி(லண்டன்), கருணாகரன்(பிரான்ஸ்), ஜெயமதி, சுதர்சினி(லண்டன்), மேகலா(சாந்தி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கோகுலன், திவியன், சாரங்கா, ஈழவன், இலக்கியா, நர்த்தனன், அக்சயா, அஸ்மிதா, தர்ஜிகன்(துவி) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 62/2, சிவநகர்,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

