6ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Viswalingam Vimalarajah
Age 50February 26, 1960 – July 2, 2010
- Born in
- Uduppiddy
- Lived in
- Zurich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விமலராசா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறுவருடமாம் அலைகடல் போல ஓடிவிட்டது
அன்றில் இருந்து இன்றுவரை
நாங்கள் அழாத நாட்களே இல்லை
ஆருயிர் அப்பாவுக்கு எங்கள்
அன்பான கண்ணீர் பூக்கள்!
அப்பா என்ற வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு
ஆனாலும் எங்களுக்கு நீங்கள் தந்துவிட்டுச் சென்றது
அன்பையும் பண்பையும் பாசத்தையும்
அரவணைப்பையும் அறிவையும் தந்து வளர்த்தீர்கள்
ஆயிரம் ஆயிரம் கனவுகள் உங்கள் கண்களில்
அப்பா நீங்கள் உயிருடன் இருக்கும் வரை
இழப்புகள் என்றால் என்னவென்று தெரியவில்லை
உங்கள் இறப்புக்குப் பின்தான் உறவுகள் என்றால் என்ன
என்பதை புரிந்து கொண்டோம்
பண்பின் சிகரமாய் பாசத்தின் அடித்தளமாய்
பாரினிலே தவிக்கவிட்டு எங்குதான் சென்றீர்கள்
பாசத்தின் விளக்காய் பகல் இரவாய் ஒளியைத் தந்துவிட்டு
பாரினிலே தவிக்கவிட்டு பறந்து சென்றீர்களே
எங்கள் இதய நதியின் ஓடமாய் என்றும்
கருகிய நினைவுகளுடன் காயங்களாக பதிந்துவிட்டது
நேர்மைக்கு இலக்கணமாம் - நீங்கள்
நேர்வழியில் சென்றீர்கள்
நேசத்தின் ஒளிக்கதிராய் நேசக்கரங்கள் நீட்டினீர்கள்
நித்தமும் யார் உதவி கேட்டாலும்
நெஞ்சை நிமிர்த்தி செய்தீர்களே!
மன உறுதியுடனும் துணிச்சலுடனும்
மாண்புமிகு மனிதனாய் மனிதருள் மாணிக்கமாய்
மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல்
மானசீகமாக உங்கள் அயராத உழைப்பினாலும்
திறமையினாலும் உங்கள் மனைவி, பிள்ளைகள்
உற்றார் உறவினர் நண்பர்கள் ஆதரவு அற்றவர்
அனைவருக்கும் உதவினீர்களே!
உங்களை கணவனாக அடைந்ததை நினைத்து
ஆயிரம் வார்த்தைகளாலும், மௌனத்தினாலும்
கண்ணீராலும் பல கோடி நன்றிகள் கூறுகின்றேன்
பல பேர் உங்களால் உயிர் பெற்றவர்கள்
பாதிப்பேர் அதை எல்லாம் மறந்து பரிதவிக்க
பாடமும் கற்பித்தார்கள்
பசியோடு வந்தவர்களுக்கு பாசத்தோடு
உணவளித்தீர்கள் இன்று எங்களை
ஒரு வேளை சாப்பிட்டீர்களா என்று கூட
கேட்பதற்கு நாதியற்று நிற்கின்றோம்
கஷ்டங்கள் வரும்போது கை நீட்ட யாரும் இல்லை
கவலைகள் வரும்போது கண்ணீர் விட்டு அழுகின்றோம்
சுமக்க முடியாத சுமைகள் வரும்போது
சோர்ந்து போகின்றோம்
சோதனைகள் வரும்போது துடிதுடித்துப் போகின்றோம்
நீங்கள் இருக்கும்போது எந்த கஷ்டமும்
எந்த வேதனையும் தெரியவில்லை எங்களுக்கு
நீங்கள் இறந்த பின்னர் நாங்கள்
படாத துன்பம் எல்லாம் பட்டுவிட்டோம்
ஆயிரம் உறவுகள் உங்கள் மரணத்தில்
ஆணி அடித்தால் போல் கூறினார்கள்
நாங்கள் இருக்கின்றோம் என்று
அந்த நிமிடம் மட்டும்தான்
அத்தனை வார்த்தைகளையும் உணர்ந்தேன்
ஆனாலும் ஒரு சிலருக்கு இன்னும் நன்றி
கூறுகின்றேன் அவர்கள் பிள்ளைகள் போல்
எங்களையும் பார்க்கின்றார்கள்
ஒரு குடும்பத்தில் ஒரு உறவு பிரிந்தாலும்
ஓர் ஆயிரம் வலிகள் அந்த குடும்பத்துக்கு மட்டும்
ஓவ்வொரு மனங்களிலும் ஏற்படும் வலி
ஒருவரை இழந்தால் தான் புரியும்
உங்களை பிரிந்த நாளில் இருந்து இன்றுவரை
உண்மையான அன்பினை உங்களைத்தவிர
யாருமே எங்களுக்கு தர முடியாது
அன்றில் இருந்து இன்றுவரை நாங்கள்
அழாத நாளே இல்லை
ஆண்டவனுக்கும் எங்களுக்கும் தெரியும்
நாங்கள் படும் வேதனை
ஆறுதல் என்ற பெயரில் அதிக வலிகள்
அனாதைகள் நாங்கள் என்றதும்
அஞ்சியே விலத்தினார்கள்
அப்போதுதான் மனிதகுணங்கள் புரிந்து கொண்டோம்
ஆனாலும் கடவுளின் துணையும் உங்களின்
ஆசிர்வாதமும் எங்களுக்கு எப்போதும்
கிடைத்துக்கொண்டே இருக்கின்றது
”என்றும் உங்கள் ஆத்மா
சாந்தியடைய வேண்டுகின்றோம்”
ஓம் சாந்தி! சாந்தி!
மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

