Aruthal

மரண அறிவித்தல்

Photo of Xavier Mary Theresa

In loving memory of

Xavier Mary Theresa

Age 70May 20, 1945 – December 13, 2015

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Mullai Udaiyarkaddu

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உடையார்கட்டு தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சேவியர் மேரித்திரேசா அவர்கள் 13-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா பிரான்சிஸ் சேவியர் கெலன் றெஜினா(ராசமணி ரீச்சர்) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சேவியர் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

டெலா பற்றிமா, பிறிச்சிற் தயாநிதி, யோசப் ஜெயறாஜ், போல் யோகராசா, அனிற்ரா நளாயினி, மேரிஸ்ரெலா, இன்பறாஜ், இயூஜின் நவறாஜ், சுகந்தன் தேவநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மேரிறீற்ரா(வேவி), மேரிப்பிலோமனா(பபி), காலஞ்சென்ற எமிலியானஸ்(துரை), பீற்றர் சாள்ஸ்(பாலன்), அலோசியஸ்(செல்வன்), மேரி அசெம்ரா(ராணி) ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரியும்,

ஜஸ்ரின், லோறன்ஸ்(லூக்), வாசுகி, திலீபா, குளோட்கிளட்வின், யோண்தயாளன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற காராளசிங்கம், திருச்செல்வம், பிலோமினா, பத்மாவதி, யூலியா(மலர்), பாக்கியராசா, காலஞ்சென்ற கிறிஸ்ரின்றூபி, எலிசபெத்தம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டெலீன், எல்வின், ஜஸ்மின், எலிசபெத், அன்னா, கிளண்டன், க்குளோடின், வர்சிகா, விக்ரர், டினோஜன், கீசன், புவிஜென்சன், லதீஷா, நிக்சன், சங்கீத்தன், லிலோஜன், அகிலாஸ், அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதித்திருப்பலி 14-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் உடையார் கட்டு கிறிஸ்து அரசர் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கிறிஸ்து அரசர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.