Aruthal

மரண அறிவித்தல்

Photo of Yogamani Sabaratnam

In loving memory of

Yogamani Sabaratnam

Age 87March 20, 1930 – November 15, 2017

Born in
Vayavilan
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட யோகமணி சபாரத்தினம் அவர்கள் 15-11-2017 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற கல்லடி சுப்பிரமணியம், அன்னமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரத்தினம்(உதவி கலால் ஆணையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமார்(லண்டன்), காலஞ்சென்ற சாந்திகுமார்(உதவி போலிஸ் அத்தியட்சகர்), சுபாஷனி(அவுஸ்திரேலியா), பிரேம்குமார்(லண்டன்), ராஜ்குமார்(ரியாத்), சூரியகுமார்(Saba Impex) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஸ்பராணி, ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அனுஷயா(கிரிஜா), கருணாகரன், தர்மினி, கங்கைமலர்(கங்கா), கலாமாலினி(மாலா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற தங்கராஜா, சிவலிங்கம், காலஞ்சென்ற இராஜசிங்கம், மகாலஷ்சுமி, காலஞ்சென்றவர்களான குலசேகரம் பிள்ளை, தனேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷர்மிலா, சுபாங்கி, பிரவீணா, நிஷாந்தி, வித்தியா, ரம்மியா, பிரதாங்கி, பூரணி, பிரசாந்தி, தருஷணன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஈஸ்ரா சபா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-11-2017 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.