ஆறுதல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு8 ஜூலை, 2000
இறப்பு30 அக்டோபர், 2014
ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் படம்

ஆகாஸ் திருலோகசிங்கம்

வயது 14

பிறந்த இடம்
பிரான்ஸ்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

மீண்டும் நீ வருவாயா ஆகாஸ்!

கருவாகி உருவாகி சிசுவாகி
கனவையும் புயலையும் கவலையும்
கலைத்திட்ட எம் உயிருடன் கலந்த ஆகாஸ்
கனவாகிவிட்டதே எம் நினைவெல்லாம்!

அன்பும் பண்பும் அறிவும் நிறைந்தவனே!
எத்தனை உறவுகள் எமக்கிருந்தாலும்
அத்தனையும் உமைப்போல் ஆகுமா!

இப்பாரினிலே எம்மைப் பிரிந்து
நான்கு ஆண்டு ஆனதையா!

பாவியர் உள்ளம் உருகுதையா உன் நினைவுகளில்
பூத்துக் குலுங்கும் பூக்களின் புன்னகையில் உன்
குதூகலப் பேச்சை குழந்தைச் சிரிப்பை தொலைத்து
ஆண்டுகள் நான்கு ஆனதையா
பாரினில் உன் நிஜத்தை காணமுடியவில்லை!

அன்பான அப்பா பாசமான அம்மா
ஆசைமிக்க ஆஷா(பிரியங்கா), மதுஷா அக்காமார்
உன் நிழல் போல் உருவான அருமைத் தம்பி அஸ்வின்
அரவணைத்த உறவுகள், மற்றும் உறவினர்கள்
அத்தனை பேரும் உன் புதிய உதயத்தை
இத்தரணியில் வேண்டுகின்றோம்
இறைவனிடம் யாசிக்கின்றோம்!

நீ மீண்டும் வருவாயாக ஆகாஸ்!

உன் பிரிவால் துயருறும் அம்மா, அப்பா,
அக்காமார் ஆஷா, மதுஷா, தம்பி அஸ்வின், மற்றும் உற்றார், உறவினர்

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 31 அக்டோபர், 20195ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 21 அக்டோபர், 20206ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.