ஆறுதல்

மரண அறிவித்தல்

ஆழ்வாப்பிள்ளை பெரியதம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஆழ்வாப்பிள்ளை பெரியதம்பி

வயது 731 டிசம்பர், 1945 – 15 ஜூன், 2019

பிறந்த இடம்
புலோலி தெற்கு
வாழ்ந்த இடம்
Viborg

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Viborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை பெரியதம்பி அவர்கள் 15-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி சின்னம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

சரஸ்வதி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,

திவாகரன்(டென்மார்க்), வதனி(டென்மார்க்), சுரேஸ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகரன்(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமனாரும்,

இஷா, யோஹான், ஷான்ஜெய்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற பெரியதம்பி கந்தசாமி(இலங்கை), கந்தசாமி சிவகொழுந்து(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஷ்னுகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), ரஜினிகாந்தன்(பிரித்தானியா), சதிஷ்கந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிவாகரன்(இலங்கை), சிவாசினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் புலோலி தெற்கில் புகழ் பூத்த சீமான் திரு.பெரியதம்பி அவர்தம் பாரியார் திருமதி சின்னம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 01/DEC/1945 ஆம் ஆண்டில் திரு.ஆழ்வாப்பிள்ளை அவர்கள் இவ் அழகிய பூமியில் பெரியதம்பி கந்தசாமி, கந்தசாமி சிவகொழுந்து போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், சரஸ்வதி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக திவாகரன், வதனி, சுரேஸ் போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பெற்றோர் விரும்பி அருமை மகளுக்கு சிவகரன் என்பவரைத் திருமணம் முடித்து வைத்து இஷா, யோஹான், ஷான்ஜெய் போன்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 15.06.2019 இல் 73 வயதில் டென்மார்க்கில் உள்ள Viborg நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"வடக்கின் ஒளியே
......வள்ளல் உயிரே
நடந்து பயின்று
......நன்மைகள் புரிந்து
கடந்து வந்தீர்
.....கடல்கள் தாண்டி
கடமைகள் ஆற்றி
.....பிரிந்து சென்றீரே”

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.