மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமலதாஸ் புஸ்பராணி
வயது 672 பிப்ரவரி, 1952 – 6 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் செல்வ வளவைப் பிறப்பிடமாகவும், மாறீன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமலதாஸ் புஸ்பராணி அவர்கள் 06-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அமலதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற எட்வின் சுரேந்திரா, செல்டன் கஜேந்திரன்(கஜன்), மேரி கெளசல்யா(செல்லா), மேரி மெரிஸ்ரெலா(ராஜி), மேரி சுறோஜினி(ரஞ்சினி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிந்துமதி, அல்றின், முருகையா, ஜெராட்தேவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மரியதாஸ் அவர்களின் மைத்துனியும்,
எட்வின் ஜோய், எட்வின் றொசான், எட்வின் வினோஜன், பிறியங்கா, தீபிகா, அபிஷா, ஏஞ்சலீனா, ஆபிரகாம், அகஸ்ரின், ஏஞ்சலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மல்வம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
வார்த்தைகளால் வர்ணிக்க இது வெறும் கதையல்ல, இது ஒரு அன்புத்தாயின் சரித்திரம்...
புஸ்பராணி ஆகிய அன்புத்தாய் 02/02/1952ம் திகதிசுண்ணாகம் எனும் சிறு கிராமத்தில் ஒரு மலரைப்போல உதிர்த்தார். சிறு வயதிலேயே அனைவருக்கும் எந்த கைமாறும் எதிர்பாராமல் உதவும்மனம் படைத்தவர். அவர் தனது சிறு சிறு வைத்தியங்களால் பல வியாதிகளை விரட்டியடித்தார். அவருடைய வாலிப பிராயத்தில் 1968ம் ஆண்டு பகுதியில் தன்னை திருமண வாழ்க்கையில் இணைத்துக்கொண்டார். தனது கணவருடனான இல்லற வாழ்க்கையில் நல்ல மனைவியாகவும், பிள்ளைகளுக்கு ஒரு அன்புத்தாயாகவும், தனது சகோதரிகளுக்கு நல்ல சகோதரியாகவும் திகழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் தனது வறுமையான நேரத்தில் கூட புன்னகைத்த முகத்துடன் தனது கஷ்டங்களை பாரங்களை தனக்குள் மறைத்துக்கொண்டு தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை நல்ல விதமாக உருவாக்கிய தாய். எனது ரத்தத்தை நான் கொடுத்தாலுமே நீ செய்த தியாகத்திற்கு ஈடாகுமா. எவ்வித மனிதவேறுபாடின்றி எல்லோருக்கும் ஒரு நல்ல தாயாக இருந்தார். நான் உன்னிடம் பட்ட கடனை தீர்க்கவே முடியாது அம்மா. தனது சிரிப்பாலும்,அன்பாலும், பாசத்தாலும், அனைவருடைய இதயங்களையும் கவர்ந்து நல்ல நண்பர்களையும், உறவுகளையும் சம்பாதித்தார். குழந்தைத்தனமானஇருதயம் கொண்ட அவர் யாரேனும் உதவி என்று கேட்டால் தன்னால் முடிந்த வரை உதவி செய்வதில் வல்லவர். மழை, வெயில் பார்க்காமல் பார்ப்பார்வேலை.
குழந்தைகள் தன் இவர் கழுத்துக்கு மாலை. தனது பேரப்பிள்ளைகளை உயிராக வளர்த்தார். தன் பேரப்பிள்ளைகளுக்காகவே வாழ்ந்தார். இறை பணிகளிலும் கடவுளுடைய தியானங்களிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்தார். மெழுகாக உருகி தந்தார்எனக்கு ஒளியை. குழந்தைகள் சிரிப்பால் தனது வேதனைகளை மறப்பார். அவர் தனது வாழ்நாள் முழுதும் மற்றவருக்கு நற்பணி செய்வதிலும்,பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்காய் ஒரு மெழுகு திரிபோல் தன்னை உருக்கு வாழ்ந்தார்.காலத்தின் கட்டளையோ? அல்லது இந்த நல்ல மனமும், அன்பும், பாசமும் இறைவனுக்கே பிடித்ததோ! மலர்களின் ராணியாகிய அன்புத்தாய்கர்த்தரிடத்தில் தற்போது நித்திரையடைந்து விட்டார்.
"சிறு பிள்ளையாய் நான் அழும் போது
ஆராரோ பாடிய தாயே
அன்று உனது ஆராரோ கேட்டு
உறங்கிய என் கண்கள்
இன்று உனது ஆராரோ எதிர்பார்த்து
உறங்காமல் அழுகின்றது என் கண்கள்”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

