31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பலவானர் மங்கையற்கரசி
வயது 8217 அக்டோபர், 1929 – 23 மே, 2012
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அம்பலவாணர் மங்கையர்கரசி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
உறங்காத பகலில்
உங்கள் நினைவும்
உறங்கும் இரவில்
உங்கள் கனவும்
ஆயிரம் பிறவிகள் கண்டாலும்
நூறு துறவுகள் கொண்டாலும்
ஓராயிரம் உறவுகள் எமக்கிருந்தாலும்
உங்கள் அன்பே
எங்கள் தாயன்பு...
மனங்களை மலைக்கவைக்கும்
நெடுந்தீவில் பிறந்து வளர்ந்து
ஐயம்பிள்ளை அம்பலவாணரை கரம் பிடித்து
செட்டிக்குளம் என்னும் ஊரில் வசித்து
செல்வங்களை பெற்று
சீரும் சிறப்புமாக வாழ்ந்து
திரும்பும் திசை எங்கும்
உங்கள் உறவுகள் போற்ற
தித்திப்பாக வாழ்ந்தீர்கள்
தாய் தேசம் விட்டு பிறதேசம் வந்து
திரும்ப தாய் தேசம் போய்
இறைவனடி சேர்ந்த எங்கள்
அம்மாவுக்கு சமர்ப்பணம்.....
உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
எங்கள் சொல்லொனா துக்கத்தில் இணைந்து உங்கள் ஆறுதல் அனுதாபங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலமாக தங்கள் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் மனம் கனிந்த நன்றியை குடும்ப சகிதமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
— பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

