நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பலவாணர் இராசமணி
வயது 876 ஜூன், 1932 – 3 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, Bagneux
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு”
எமது குல விருட்சத்தின் ஆணிவேரறுந்து மண்ணில் சாய்ந்த செய்தி கேட்டறிந்தும், இணையத்தளத்தில் பார்த்தறிந்தும், ஆறாத்துயரில் இருந்த எமக்குத் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தொலைபேசி, மின்னஞ்சல் மூலமும் நேரிலும் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களிற்கும் நன்றிகள்.
அன்னாரின் ஆத்மா சாந்தி வேண்டி, தெய்வீகப் பாடல்களையும், தேவாரங்களையும், பாடி மன அமைதி கொடுத்தவர்களுக்கும் நன்றிகள்.
வீட்டிற்கும், பார்வையிடத்திற்கும் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும் நன்றிகள் மயானம் வரை வந்து இறுதிக்கிரியைகளில் பங்கு கொண்ட பாசநேசங்களை வெளிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகள். உணவுகள் வழங்கிய அன்புள்ளங்களிற்கும் நன்றிகள். 31ம் நாளன்று ஆத்மசாந்திப் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ நன்றி கூறத் தவறியிருந்தால் அனைவருக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றிகளைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவில் 06/JUN/1932 இல் திரு.திருமதி இராமலிங்கம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளாய் இராசமணி அவர்கள் பசுபதிப்பிள்ளை பாக்கியம், பொன்னுத்துரை, சற்குணம் எனுன் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அழகிய ஆண் அழகான அம்பலவாணர் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக பாலச்சந்திரன், திருச்செல்வம், பாலசரஸ்வதி, பிறேமசாந்தி, கோபாலகிருஷ்னன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஜெயசீலி, லலிதாம்பாள், நாகேந்திரராஜா, சிவனேஸ்வரன் போன்றோரை திருமணம் முடித்து வைத்து சர்மிலன், பவித்திரன், துவாரகா, டிஷாந்த், வர்மிதா, பார்த்திபன், பத்மகௌரி, காண்டீபன், ஜவிதா, சர்மிலி, பிரதிகா, ஹரிஷன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், ஷஸ்மிகா எனும் பூட்டப்பிள்ளையுடனும் நிறைந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றுண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 03.09.2019 இல் 87 வயதில் பிரான்ஸில் உள்ள Bagneux நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
அலை இசையில் அவதரித்த உறவே
மலையாய் உயர்ந்து மனிதநேயம் கொண்டு
கலை போல் அழகுற விளங்கிய
கருனை மனமே கலங்கி நிற்க
எங்கே போனீர் எங்கள் உயிரே.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

