மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பாள்துணை சந்திரசேகரம்
வயது 708 மே, 1949 – 25 மே, 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அம்பாள்துணை சந்திரசேகரம் அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம்(சிவேந்திரம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகந்தினி, சுரேஸ்காந்தன், றமேஸ்காந்தன், றஜனிகாந், றஜீவ்காந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், பாலாம்பிகை, பகவதி மற்றும் சிவன்செயல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உதயகுமார், சாந்தி, காலஞ்சென்ற லக்ஷிமிதேவி(வவிலா), உஷா, ராஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஓவியா, நவினா, தேனுஜா, கோகுலன், ஜான்சிகா, சந்தோஷ், தனுஷ், துஷாறா, ஆசிகா, அனிஷா, ஆதேஷ், அபிநிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அச்சுவேலி பத்தமேனியில் இராசையா சின்னத்தங்கச்சி தம்பதிகளுக்கு அன்பு மகளாக அம்பாள்துணை அவர்கள் 08/MAY/1949 ஆம் ஆண்டில் இவ் அவனியில் பாலசிங்கம், பாலாம்பிகை, பசுவதி, சிவன்செயல் எனும் உடன் பிறப்புகளுடன் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் செல்லையா முத்தம்மா தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான சந்திரசேகரம் என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து சுகந்தினி, சுரேஸ்காந்தன், றமேஸ்காந்தன், றஜனிகாந் ,ரஜீவ்காந் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் உதயகுமார், சாந்தி, லக்ஷிமிதேவி, உஷா, ராஜி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து மாமியாக குறையின்றி கடமைகள் ஆற்றி ஓவியா, நவினா, தேனுஜா, கோகுலன், ஜான்சிகா, சந்தோஷ், தனுஷ், துஷாறா, ஆசிகா, அனிஷா, ஆதேஷ், அபிநிஷா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். மன வருத்தம் ஏற்படும் போது ஆறுதல் தந்து உருகிய உயரிய உறவு. சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.05.2019 இல்70 வயதில் அச்சுவேலி பத்தமேனியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அச்சுவேலி மண்ணின்
......அழகு உருவே
அன்பாகப் பேசும்
......அன்னை உள்ளமே
ஆனந்த மனமே
......ஆயுளின் பாதியே
ஆற்றாமையில் தவிக்கும்
......ஆருயிர் உறவே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

