ஆறுதல்

மரண அறிவித்தல்

அம்பிகாதேவி துரைராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அம்பிகாதேவி துரைராஜா

வயது 7613 செப்டம்பர், 1939 – 6 டிசம்பர், 2015

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
வடலியடைப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு வடலியடைப்பு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அம்பிகாதேவி துரைராஜா அவர்கள் 06-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கமுத்து தம்பதிகளின் ஏகப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா துரைராஜா(முன்னாள் புனிதவேல் மில் உரிமையாளர்- பண்டத்தரிப்பு சந்தை) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரசேகர்(அவுஸ்ரேலியா), சந்திரராஜு(லண்டன்), சந்திரபாலன்(லண்டன்), Dr.சந்திரமோகன்(கனடா), மஞ்சுளா(அவுஸ்திரேலியா), சந்திரபவன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வரதராஜா, சச்சிதானந்தம் மற்றும் சதானந்தம்(தெகிவளை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விஜியாகினி(விஜி- அவுஸ்திரேலியா), தர்ஷினி(லண்டன்), சந்திரவதனி(லண்டன்), மனோகரன்(அவுஸ்திரேலியா), நிர்மலா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷனா, அட்ஷகி, சாகித்யா, சாதுர்யா, ஜெயந்திகா, ஜெயந்தன், சுஜீவன், கோபிகா, சாரங்கி, தரண்யா, ஜெய்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் கிழக்கு, கோணாவளை ஒழுங்கை, சாயி துர்க்கை அம்மன் ஆலயம் என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.