மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அம்பிகாபதி மீரா
வயது 688 செப்டம்பர், 1948 – 30 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை வடக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பிகாபதி மீரா அவர்கள் 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கமலம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அம்பிகாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற அருட்சோதி, செந்தில்குமார்(கண்ணன், அருண்), காயத்திரி, மேகலா, சுஜிவா(மீனா), அம்பிகை(ரேவதி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், செல்வி, மனோகரா, கருணா, மதுரா, மயூரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பஞ்சலிங்கம், தினேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சீதாலட்சுமி, மாளினி, ஏழைகிருஸ்ணன், ரகுநாதன் காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, மனோன்மணி, அருமைநாயகம், காலஞ்சென்ற தியாகராசா, நாகநாதபிள்ளை, காலஞ்சென்ற தாட்சாயினி, தவராசா(லண்டன்), பாக்கியம், காலஞ்சென்றவர்களான தவமணி, பசுபதிப்பிள்ளை, மற்றும் தவமணிதேவி, காலஞ்சென்ற தாமோதிரம்பிள்ளை, ஞானம்பிகை, மனோரஞ்சிதம், காலஞ்சென்ற பரமசுந்தரம், இராஜேஸ்வரி(குஞ்சு- லண்டன்), குகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லதுஷன், தாட்சாயினி, சஞ்ஜித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கே.கே.ஸ் றோட்,
செங்கமலவசா,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

