மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஆனந்தபவனம் கந்தையா
வயது 8621 மே, 1933 – 6 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தபவனம் கந்தையா அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா சத்தியபாமா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சந்தனம் வீரப்பாஅழகு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரி அவர்களின் அன்புத் தாயாரும்,
சர்வேஷ்வரா(ஈசா) அவர்களின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புப் பேத்தியும்,
ரஞ்சி(பிரித்தானியா), மகேஸ்(பிரித்தானியா), மங்கா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அஞ்சலா(கனடா), கிரிசாந்(பிரித்தானியா), றஜீவ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
அலெக்(கனடா), அஞ்சலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
டெய்சி(பிரித்தானியா), அல்பி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அழகிய இடமும், தேசிய உணர்வு கொண்ட மக்களும், எல்லா வளங்களும் சிறப்புற விளங்கும், மீன்பாடும் தேன்நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பில் 21/MAY/1933 இல் திரு.திருமதி நடராஜா சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மகளான ஆனந்தபவனம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ரஞ்சி, மகேஸ், மங்கா போன்ற உடன்பிறப்புடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சந்தனம் வீரப்பா அழகு தம்பதிகளின் அழகிய ஆண் அழகான கந்தையா அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கௌரி எனும் பிள்ளையைப் பெற்று வளர்த்து சர்வேஷ்வரா(ஈசா) என்பவரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த வைஷ்ணவி எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும், அன்பு பாசம் நிறைந்து காணப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு வாழ்ந்தார்.
இவ்வாறு பிள்ளை, பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 06.09.2019 இல் 86 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
“மட்டு வாவியின் முத்தே
பட்டுப் போல் பளபளத்த
பவள மேனிப் பாவையே
கவளம் உருட்டி கையினில் தந்திடும்
அழகு அம்மா அன்பு பாட்டியே
எங்கே போனீர் எமைப் பிரிந்து”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

