நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்பு விஜயசந்திரன்
வயது 574 ஜூன், 1963 – 20 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- கொட்டடி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டடி சிவன் பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு விஜயசந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
அமரர் விஜயச்சந்திரன் அன்பு அவர்களின் வாழ்க்கை வரலாறு
இலங்கைத் தீவின் வடபுலத்தின் தலைப் பட்டினங்களில் சிறப்புப் பெயர் பெற்ற யாழ்ப்பாண நகரின் இதயத்தில் அமைந்துள்ள கொட்டடி என்னும் நாமத்தை தாங்கி நிற்கும் வளம் நிறைந்த இடத்தில் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்திற்கு அண்மையில் சிவன் பண்ணை வீதியின் அருகமைந்துள்ள அன்பும் பாசமும் நிறைந்து விளங்கும் உயர் மனையில் ஆயிரத்து தொழாயிரத்து அறுபத்து மூன்றாம் ஆண்டு ஆனி மாதம் நாலாம் திகதி அராலியை சேர்ந்த சின்னத்தம்பி அன்பு அவர்களும் கொட்டடியை சேர்ந்த ஆசைக்கிளி அவர்களும் தாம்பத்திய தர்மத்தில் திழைத்திருந்து அருந்தவம் நோற்றதன் காரணமாக அமரர் விஜயச்சந்திரன் அவர்கள் குடும்பத்தின் இரண்டாவது புத்திரனாக அந்த கொட்டடி மண்ணில் ஆயிரத்து தொழாயிரத்து அற்பத்து மூன்றாம் வருடம் ஆனி மாதம் நாலாம் திகதி புண்ணிய புத்திரனாக உதித்ததால் குடும்பத்தின் அனைத்து உள்ளங்களும் குதுகலித்து ஆனந்த கீதமிசைத்தனர். உறவினர்கள் உள்ளத்தில் உற்சாகம் நிறைய உவகையெய்தினர். அயலவர்கள் ஆனந்த வாழ்த்துக்களை திருவாளர் அன்பு தம்பதிகளுடன் பரிமாறிக்கொண்டு புளகாங்கிதமடைந்தனர்.
அமரர் விஜயச்சந்திரன் வில்லாண்மை மிக்க பாரத விஜயனுக்கொப்பாக சொலாண்மை மிக்கவனாகவும் தனது மூத்த சகோதரன் விக்கினேஸ்வரனுடனும் இளைய சகோதரன் விமலேஸ்வரனுடனும் அன்பையும் பாசத்தையம் இவற்றுக்கெல்லாம் மேலாக பய பக்தியுடனும் வளர்ந்து வந்தார். தந்தையிடம் அறிவையும் தாயிடம் அன்பையும் தன் எதிர்காலத்திற்கு ஆதாரமாக பெற்றபோதிலும் பெண் சகோதரி ஒருவர் பிறப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காலத்தை கழித்துவந்தார் விஜயன் என்ற மறுநாமங்கொண்ட அமரர் விஜயச்சந்திரன்.
தனது ஆரம்ப கல்வியை யாழ் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியில் ஆரம்பித்து க.பொ.த. உயர் தரம்வரை கல்வி கேள்வியிலீடுபட்டு இணைந்த கணிதத் துறையில் அதி உயர் புள்ளிகளையும் பெற்றிருந்தார். புத்தக கல்வியில் சிறந்த ஊக்கத்தை வெளிப்படுத்திய அமரர் விளையாட்டுத்துறை மற்றும் கலை கலாச்சார செயற்பாடுகளிலும் தான் சளைத்தவரல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பல தடவைகள் பரிசில்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
கல்வியில் சிறந்து விளங்கிய அமரர் அண்ணன் தம்பி மாமன் மச்சான் மச்சாள் பெரியப்பா சித்தப்பா பெரியம்மா சின்னம்மா போன்ற உறவுப் பிணைப்புக்களுடன் பாசத்தால் கட்டுண்டு வாழ்ந்துவரும் நாட்களில் நமது நாட்டில் சுடர்விட்டெழுந்து பின் கொழுந்தாக உருவெடுத்த இன முரண்பாட்டை அடிப்படையாக கொண்ட யுத்தம் காரணமாக கொட்டடியை விட்டு கடந்த 1981 ம் ஆண்டில் கொட்டடியை விட்டு வெளியேறியது மட்டுமல்ல நாட்டைவிட்டே வெளியேறி பிரான்ஸ் தேசத்தில் தஞ்சம்புகுந்தார்.
பிரான்ஸ் நாட்டின் வித்தியாசமான கலை கலாச்சாரங்களுக்கு மத்தியிலும் எமது தமிழர் தம் பாரம்பரியங்களையும் உயர் விழுமியங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும் எதறித்தள்ளிவிடாது பேணிப் பாதுகாத்து வந்த ஓர் உயர் நிலை பண்பாளனாகவே பிரான்சின் தலை நகராம் பரீஸில் தனது வாழ்க்கையை நிலைநாட்டி வாழ்ந்துவரும் காலங்களில் பல்வேறு நாட்டவர்களுடனும் பரஸ்பரமாக நட்பை பகிர்ந்து ஓர் சமாதான சௌபாக்கிய வாழ்க்கையை அனுபவித்து வந்தார் என்றால் மிகையாகாது. பிரெஞ்சு மொழியில் சரளமாக உரையாடும் வல்லமை கொண்ட அமரர். தனக்கென ஓர் வருமான மார்க்கத்தை கண்டறிய முயற்சி செய்து கொள்ளும் நோக்குடன் சமையல் கலையில் பயிற்சிபெற ஆரம்பித்தார். பயிற்சியில் தன்னை கிரயமாகவும் முழுமையாகவும் ஈடுபட்டு அற்பணிப்புடன் செயற்பட்டு வந்ததன் விளைவாக தலைமை சமையலாளராக ( Chaff) தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இத் துறையில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அளவுக்கு பணியாற்றி வந்தார். மனிதன் உண்மையாக தன் மன நிறைவேடு போதும் என்று சொல்லி நிறைவடைவது உணவை உண்ணும்போது தான். எனவே உண்மையாகவே போதும் போதும் என்று நிைைறவடையக்கூடிய உணவு தயாரிக்கும் துறையில் அமரர் ஈடுபட்டு வந்தது அவர் செய்த பாய்கியமாகும். பல்வேறு நாட்டவர்களுக்கும் அவர்களின் கலாச்சாரங்கள் சார்ந்த உணவுகளை தயாரிக்கும் வல்லமை கொண்ட chaff என்ற பதவியை பல தசாப்த காலங்களாக அலங்கரித்து வந்தமை உண்மையிலேயே பெருமைக்குரிய விடயமாகும்.
இளம் பராயத்திலிருந்தே இவர் ஓர் பரோபகாரியாகவும் இறை பக்கி மிகந்தவராகவும் விளங்கிவந்தார். அடுத்தவர் துயர்கண்டு அவர்தம் துயரில் தானும் பங்குகொண்டு தன் தூய கரங்களால் அவர்தம் கண்ணீரை துடைக்கு விடும் பண்பாளன் என அன்னாரின் உற்ற நண்பர்களும் உறவுகளம் அன்னாரை
நோக்கி இரு கரம் கூப்புகின்றனர். இன்றும் பெருமை பாராட்டுகின்றனர். இத்தியாதி தகமைகளுடன் கூடிய ஓர் மா மனிதனின் இழப்பு என்றும் வெற்றிடமாகவே காணப்படப் போகிறதே என்று மனம் தவிக்கின்றது.
இவ்வாறான பண்புகளுடன் தன்னை இணைத்துக்கொண்டு பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்குவரும் நாட்களில் தனது ஒன்றுவிட்ட சகோதரனாகிய பரமசிவம் அவர்கள் அங்கே நோய் வாய்ப்பட்டதன் காரணமாக அன்பிரக்கம் கொண்டு அவரின் குடும்பத்தின் காவலனாக தன்னை அற்பணித்தது மட்டுமல்ல உள்ளத்தாலும் அன்பை பரிமாறி குடும்பத்தில் தானும் ஒருவனாக தன்னை இணைத்துக்கொண்டு விசுவாசமாக இருந்துவந்த காரணத்தால் பரமசிவம் புஸ்பராணி தம்பதியரின் பிள்ளைச் செல்வங்களான பிரிந்ததா திவ்வியா ஆகிய இருவரும் தமது சித்தப்பாவை "பூவா''என்ற செல்லப் பெயரை சூட்டி அன்படன் அழைத்து மகிழ்ந்தனர். இவர்கள் பூவா என அழைக்கும்போதெல்லாம் அதைக்கேட்டு தானும் மனம் மகிழ்ந்து தன் மனதிற்குள் அப் பெயரை ரசித்துவந்தார் அன்னாரான விஜயன். தனது பெற்றோர் உயிருடன் இருந்த காலங்களில் எவ்வித குறைவுமின்றி அவர்கள் மனம் கலங்கத அளவுக்கு அவர்களை காப்பாற்றி வந்தார். அன்னார் முதலில் தனது அன்புத் தந்தையை இழந்தார் பின்ப தன் பாசமிகு தாயையும் இழந்த ஏகாந்த நிலையில் வாழ்ந்துவந்தார். தனது பெற்றோர் காலமாகிய செய்தியை கேள்வியுற்றதும் பரிதவிப்புடன் ஓடோடி வந்து அவர்களுக்கு செய்யவேண்டிய ஈமக்கிரியைகளையும் கொள்ளிக் கடனையும் எமது இந்து சமய பண்பாடுகளுக்கு அமைவாக நிறைவேற்றி தனது கடமையை முற்றுப்பெற செய்தமை இவ்விடத்தில் சிறப்பாக சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும். தான் நிறைவேற்றிய இக் கடமைகள் அனைத்தும் அன்னாருக்கு மனதளவில் பாரிய திருப்பியை கொடுத்த விடயங்களாகும்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

