மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அனித் சதாசிவம்
வயது 2922 ஆகஸ்ட், 1989 – 18 மே, 2019
- பிறந்த இடம்
- கோட்டைக் கல்லாறு
- வாழ்ந்த இடம்
- Sissach
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு கோட்டைக்கல்லாறைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Land Sissach ஐ வதிவிடமாகவும் கொண்ட அனித் சதாசிவம் அவர்கள் 18-05-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சதாசிவம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
என்ரிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
நதீன் அவர்களின் அருமை அப்பாவும்,
வாணு அவர்களின் பாசமிகு சகோதரரும்,
மணிவண்ணன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
அனனியா, மனிஸ் ஆகியோரின் ஆசை மாமாவும்,
கிருபைராசா, உதயகுமாரன்(மாவட்ட நீதிமன்றம்- கல்முனை), அனுரா(லண்டன்), பசுபதி, குணவதி, வாஜினி(ஆசிரியை), ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான நல்லரெத்தினம், திருச்செல்வம், ஜெயரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான பத்மராசா, அரசம்மா, சுப்பிரமணியம், சோமசுந்தரம்(மதன்ஸ்), கிருபைராசா, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சுந்தரலிங்கம்(மாவட்டசெயலகம்- மட்டக்களப்பு), மகேஸ்வரி(அவுஸ்திரேலியா), கமலேஸ்வரி, தட்சாயினி(ஆசிரியை), சௌந்தலா தேவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
சதாசிவம், சந்திராதேவி, றமனி, பசுபதி ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-05-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Gottesackerweg 14, 4450 Sissach, Switzerland எனும் முகவரியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த கோட்டைக் கல்லாறில் மாஸ்ரர் சதாசிவம் நல்லம்மா(ஆசிரியர்) தம்பதிகளுக்கு அழகிய புதல்வனாக அனித் அவர்கள் 22/AUG/1989 இல் அழகு நிறைந்த இவ் இடத்தில் வாணு எனும் பாசமிகு உடன் பிறப்புடன் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் என்ரிக்கா எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நதீன் எனும் அற்புத பிள்ளையை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் கீபோட் பேஸ் கிற்றார் வாத்தியக் கலைஞராக செயற்பட்டதுடன், எப்போதும் புன்னகை முகத்துடன், நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.05.2019 இல் 29 வயதில் சுவிஸில் உள்ள Basel Land Sissach இல் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
குருத்து ஒன்று
......கருகி வீழ்ந்தது
குலமே கூடி
.......கூக்குரலில் அழவைத்தது
சமுத்திரமே வற்றியதால்
.......சரித்திரமே மாறியது
இசை கானம் இன்றி
.......இதயங்கள் தவிக்குது
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

