ஆறுதல்

நன்றி நவிலல்

அன்னலட்சுமி தட்சணாமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னலட்சுமி தட்சணாமூர்த்தி

வயது 8114 ஏப்ரல், 1938 – 1 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
தும்பளை
வாழ்ந்த இடம்
தும்பளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

எங்களது தாயாரின் மறைவுச்செய்தி அறிந்து நேரில் வருகைதந்து ஆறுதல் தெரிவித்தோர், சகல வழிகளிலும் உதவிபுரிந்தோர், இறுதிச்சடங்கில் பங்கு பற்றியவர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தவர்கள், பதாதைகள், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள் அச்சிட்டு ஆறுதல் அளித்தோர், மருத்துவமனையில் தாயாரிற்கு வைத்தியசிகிச்சை அளித்தவர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

— கந்தவேல் (மகன்)

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ். நெல்லண்டை தும்பளையில் 14/APR/1938 இல் திரு.திருமதி.இராஜரட்ணம் செல்லாச்சி தம்பதிகளின் அருமை மகளாய் அன்னலட்சுமி அவர்கள் இராஜ் சுப்பிரமணியம்,இ.சிவபுண்ணியம் போன்ற சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கந்தவனம் தம்பதிகளின் அன்பு மகனான கண்டி செல்வம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் திரு.மு.க.தட்சணாமூர்த்தி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தனலட்சுமி, ஜெயலட்சுமி, கந்தவேள் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து ம.கணபதிப்பிள்ளை, க.சிவனேசன், புவனஜோதி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மதிவதனி, மதிவாணன், செல்வகுமார், கிருஷாந்தி, சிவதர்ஷா, பிரணவன், அபர்ணா, தயான், சஜீவ் போன்ற பேரப்பிள்ளைகளுடனும் விகாஷன், விதுஷா, காவியா, கபிஷன், அர்ச்சிகா எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதில் அலாதி விரும் உடைய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை, உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்01.08.2019 இல் 81 வயதில் தும்பளையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்

நெல்லண்டை மண்ணின்
நேர்மை உறவே
நல்ல குணம் நிறைந்த
நன்மை விரும்பியே
வல்லமை மனதுடன்
வாசலில் காத்திருக்கும்
வெள்ளை மனமே
விடைபெற்றீர் எமை விட்டு

பிற அறிவித்தல்கள்

  1. 1 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.