நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலட்சுமி சிறீஜெயானந்தம்
ஓய்வுபெற்ற ஆசிரியை- மஹாவத்த அரச தமிழ் கலவன் பாடசாலை நாரஹேன்பிட்டி
வயது 7220 செப்டம்பர், 1947 – 20 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- துன்னாலை
- வாழ்ந்த இடம்
- கிருலப்பனை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சந்திரா என அன்போடு அழைக்கப்படும் இவர் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்ட ஒரு உன்னத ஆத்மா. இவர் நாரஹேன்பிட்டி மஹாவத்த அரச தமிழ் கலவன் பாடசாலையின் ஓய்வுபெற்ற ஆசிரியர்.
யாழ்ப்பாணம் துன்னாலை கிழக்கில் 20/SEP/1947 இல் வேல்முருகு இராசம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வியாக அன்னலட்சுமி அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார். சாந்தமலர், வேலுப்பிள்ளை, பொன்னுத்துரை எனும் சகோதரங்களுடன் குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும்,சிறீஜெயானந்தம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கங்கைச்செழியன், கங்கைப்பிரியா எனும் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்து உதவிகள் செய்து, சுவையான உணவுகள் செய்வதில் கைதேர்ந்தவராக விளங்கினார்.
இவ்வாறு கணவர், பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் 20.10.2019 இல் 72 வயதில் கொழும்பு கிருலப்பனையில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

