மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலிங்கம் கந்தையா
அன்னலிங்கம் ஸ்ரோஸ் - பழைய சந்தை, யாழ்ப்பாணம்
வயது 858 ஜூன், 1934 – 21 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், கோண்டாவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கோண்டாவில், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் கந்தையா அவர்கள் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகுமார், பவானி, பகிர்தா, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துளசி, மோகனதாஸ், பிறேமகாந்தன், கௌசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம்(V.K.K- குணரட்ணம் ஸ்றோஸ்- யாழ்ப்பாணம்), கனகரத்தினம் மற்றும் அம்பிகை(கமலம்- கனடா), காலஞ்சென்ற அம்பாலிகை(சறோசனா), பரமேஸ்வரி(சின்னகிளி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சறோஜினி மற்றும் யோகேஸ்வரி, தனபாலசிங்கம்(ராசா- கனடா), காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(கிளி), யோகேஸ்வரன்(சந்திரன்- ஜேர்மனி), வசந்தகுமாரி(வசந்தா- கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிஷன், நிஷானி, ஜெனீவன், ஜெனீதா, ஜெனுஷன், ஜெனிக்கா, கவீன், சஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் கொக்குவிலில் 08/Jun/1934 இல் திரு.திருமதி கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனாக திரு.அன்னலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குணரத்தினம், கனகரத்தினம், அம்பிகை, அம்பாலிகை மற்றும் பரமேஸ்வரி எனும் உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், மயில்வாகனம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகள் மகேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பாலகுமார், பவானி, பகிர்தா, பகீரதன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்ந்து துளசி, மோகனதாஸ், பிறேம கௌசிகா என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து அபிஷன், நிஷானி, ஜெனீவன், ஜெனீதா, ஜெனுஷன், ஜெனிக்கா, கவீன், சஸ்வின் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் யாழ்.பழைய சந்தை அன்னலிங்கம் ஸ்ரோஸ் உரிமையாளரான இவர் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.07.2019 இல் 85 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
உழைத்த எம் உன்னத உறவே
களைப்பு இன்றி சுழன்ற உயிரே
நிலைத்து வாழ கடினப்பட்ட மனமே
இழைத்து இழைத்து உடம்பு தேய்ந்து
அனைவர் வாழ்வில் ஒளியாய் விளங்கி
ஆண்டன் அடியில் தஞ்சம் அடைந்தீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

