ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னலட்சுமி விசுவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னலட்சுமி விசுவலிங்கம்

வயது 918 ஜனவரி, 1928 – 21 ஜூன், 2019

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வாழ்விடமாகவும், 1989 ம் ஆண்டிலிருந்து கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி விசுவலிங்கம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம்(தெல்லிப்பழை) விசாலாட்சி(அளவெட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், செல்லையா(அச்சுவேலி) சுந்தரம்பிள்ளை(தெல்லிப்பழை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. அனந்தசயனன்(லண்டன்), சுதர்சன்(கனடா), விசாளினி(கனடா), முரளிதரன்(கனடா), முருகதாசன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஜனி(லண்டன்), விஜித்தா, ஜெகதீஸ்வரன், சுகிர்தினி, ஷரன்(Sharon) ஆகியோரின் ஆசை மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னுலட்சுமி, ராசலட்சுமி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, நவரட்ணம், மகேஸ்வரி, பரமேஸ்வரி, பத்மாவதி, பத்மலோசனி, வல்லிபுரம், ராகவன் மற்றும் குலராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தூரன்- சிவாந்தி(லண்டன்), லதீசன், ரிஷாரா, தர்ஷா- துஷியன்(லண்டன்), வினோஷா, மயூரா, ரமீத்தா, சேரா(Sarah), ஜொனத்தன்(Jonathan) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் தெல்லிப்பழையில் 08/Jan/1928 இல் திரு திருமதி.சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் புத்திரியாக அன்னலட்சுமி அவர்கள் பொன்னுலட்சுமி, ராசலட்சுமி, சிவானந்தன் எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி செல்லையா சுந்தரப்பிள்ளை தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான விசுவலிங்கம் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக Dr.அனந்தசயனன், சுதர்சன், விசாளினி, முரளிதரன், முருகதாசன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து ரஜனி, விஜித்தா, ஜெகதீஸ்வரன், சுகிர்தினி, ஷரன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து செந்தூரன்-சிவாந்தி, லதீசன், ரிஷாரா,தர்ஷா-துஷியன், வினோஷா, மயூரா, ரமீத்தா, சேரா, ஜொனந்தன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 21.06.2019 இல் 91 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

என் அருமை
....... உயிரே
கண் துஞ்சாது
........காத்து
மண் உலகை
....... ஆட்சி செய்து
விண் உலகு
.........சென்றீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.