ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னலட்சுமி நாகராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அன்னலட்சுமி நாகராசா

Retired Teacher Drieberg College

வயது 821 பிப்ரவரி, 1937 – 13 ஜூன், 2019

பிறந்த இடம்
மீசாலை
வாழ்ந்த இடம்
Birmingham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி நாகராசா அவர்கள் 13-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வேலுப்பிள்ளை அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

சுப்ரமணியம் நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

மதிவதனி, Dr. பவானந்தன், சந்திரவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, யோகம்மா, பரமேஸ்வரி, Dr. குணசிங்கம் மற்றும் ராசாத்தி, தவமணி, பொன்னம்பலம், லங்காதேவி, Dr. பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோகரன், Dr. திருமகள், கிருஷ்ணராஜன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்சுதன், சாயினி, ஹர்ஷிகா, ஹம்சிகா, மிதுனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்பாண மாவட்டம் சாவகச்சேரி மீசாலையில் 01/FEB/1937 இல் திரு திருமதி.வேலுப்பிள்ளை அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாக அன்னலட்சுமி அவர்கள் தங்கம்மா, யோகம்மா, பரமேஸ்வரி, Dr.குணசிங்கம், ராசாத்தி, தவமணி, பொன்னம்பலம், லங்காதேவி, Dr.பாலசிங்கம் எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

மேலும் விளையும் பயிரை முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கு இணங்க சிறு வயதில் பரந்த அறிவும் நல்ல பண்பும் கொண்டு வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான நாகராசா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக மதிவதனி, Dr.பவானந்தன், சந்திரவதனி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து மனோகரன், Dr.திருமகள், கிருஷ்ணராஜன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து சஞ்சுதன், சாயினி, ஹர்ஷிகா, ஹம்சிகா, மிதுனன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் ஆசிரியையாக கடமையாற்றியதுடன் ஓய்வும் பெற்றார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.06.2019 இல் 82 வயதில் பிரித்தானியாவில் உள்ள Birmingham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

மீசாலை மண் தந்த
......மிடுக்கானஉயிரே
பாசாங்கு செய்யாத
.......பாச மலையே
வாழ்வாங்கு வாழ்ந்த
....... வள்ளல் உறவே
வீழ்ந்தாரே! மண்ணில்
.........பிரிந்தாரே! எமைவிட்டு

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.