மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னலக்ஸ்மி சிவபாதசுந்தரம்
வயது 6522 பிப்ரவரி, 1951 – 30 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- Alvai
- வாழ்ந்த இடம்
- Ajax
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் பெரியார் பகுதியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட அன்னலக்ஸ்மி சிவபாதசுந்தரம் அவர்கள் 30-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதசுந்தரம்(குட்டி அண்ணா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெயந்தி(ஆசிரியை- தேவரையாளி இந்துக்கல்லூரி), காலஞ்சென்ற ஜெயராஜ், ஜெயகாந்தன்(கனடா), ஜெயசந்திரிக்கா(பெரியார் பகுதி), ஜெகன்(கனடா), ஜெயபிரபா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தவடிவேல், பாலசுப்பிரமணியம், மற்றும் பவளநாயகி(பெரியார் பகுதி), சிவனேசலிங்கம்(கனடா), சிவலிங்கம்(திக்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்திரநாதன்(பெரியார் பகுதி), சிரேமி(கனடா), யசோதா(கனடா), மதன்லால்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரிகேஸ், அட்சயா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

