நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்னபாக்கியம் கோபாலு
வயது 869 ஜூலை, 1934 – 18 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- வதிரி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கோபாலு அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி அறிந்து நேரடியாகவும், தொலைபேசி, ஈ-மெயில் வாயிலாகவும், மற்றும் சமூக வலைத்தளங்களான வாட்ஸ் ஆப், வைபர், முகநூல் மூலமாகவும் அனுதாபம் தெரிவித்து ஆறுதல் கூறியவர்களுக்கும், அன்னாரின் இறுதிக்கிரியைகளின் போது சமூகம் தந்தவர்களுக்கும், ஈமக்கிரிகைகளை நேரலை வழியாகப் பார்த்து, அதில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், தாயாரின் இறப்புச் செய்தியை “எங்கள் சொந்தம்” மற்றும் “வதிரி மக்கள் மன்றம்” முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரசுரித்த அன்புள்ளங்களுக்கும், கண்ணீர் அஞ்சலி வெளியிட்ட வதிரி மக்கள் மன்றம் - கனடா மற்றும் இலங்கை கிளையினருக்கும், வதிரி சன சமூக நிலையத்தினருக்கும், 89 Batch நண்பர்களுக்கும் மற்றும் அன்னையின் மரண அறிவித்தலை பிரசுரித்த Lankasri செய்தி நிறுவனத்தின் Aruthal பகுதியினருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், Lankasri Aruthal பகுதியில் அஞ்சலி செலுத்திய அன்புள்ளங்களுக்கும் எங்கள் சிரம் தாழ்த்திய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும், எமது தாயாரின் ஈமக்கிரியைகளை நடாத்துவதற்கு இட வசதி அளித்து உதவி புரிந்த Chapel Ridge Funeral Home and Cremation Centre - Canada நிறுவனத்தினருக்கும், மலர் வலயங்கள் அனுப்பி மரியாதை செலுத்திய உள்ளங்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், இக்காலப் பகுதியில் உணவு பரிமாறிய அன்புள்ளங்களுக்கும், அந்தியேட்டி கிரியையில் பங்குபெற்ற உள்ளங்களுக்கும் எங்கள் உள்ளம் கனிந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

