ஆறுதல்

நன்றி நவிலல்

அந்தோனியாபிள்ளை மேரி நீக்கிலஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனியாபிள்ளை மேரி நீக்கிலஸ்

வயது 9916 டிசம்பர், 1919 – 18 அக்டோபர், 2019

பிறந்த இடம்
நெடுந்தீவு கிழக்கு
வாழ்ந்த இடம்
Neasden

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், மிகவும் படித்த மக்களாக விளங்குவதுடன் தீவுக்கூட்டங்களில் பெரிய தீவுமாக விளங்கும் நெடுந்தீவு கிழக்கில் 16/DEC/1919 ஆம் ஆண்டில் அதிபரான ஜோசப் ஞானப்பிரகாசம் விக்டோரியா தம்பதிகளின் அழகுக் குழந்தையாக மேரிநீக்கிலஸ் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் அழகும் அறிவும் நிறைந்த இவர் அருட்சகோதரி புஷ்பம், காலஞ்சென்றவர்களான மரியஆரோகணம்பிள்ளை, மரியம்மா மாமணி திருநாவுக்கரசு, மரியநாயகம் பிள்ளை, மேரி ஜோன் பப்ரிஸ்ற்(இராசா), அந்தோனிப்பிள்ளை பாலசிங்கம், திரேசாமலர் பூவிலிங்கம், கிறிஸ்டி ராஜரத்தினம், செபஸ்தியாம்பிள்ளை செல்லக்கோன், சார்ள்ஸ் ஜீவரட்ணம், தியாகராஜா ஆகிய அன்புச்சகோதரங்களுடன் இன்பமாய் வளர்ந்து பெரியவளாகியதும், ஆசிரியரான நீக்கிலாபிள்ளை Blossom தம்பதிகளின் அன்பு மகன் Wilfred Nicholas Arasu (Chief Civil & Structural Engineer -Aramco ) எனும் அழகும் அறிவும் மிக்க மகனை அன்பு மணம் கொண்டார்.

முழுக் கதையையும் வாசிக்க

Padmini, Gerard Nicholas, Dr.Julian Nicholas எனும் அன்புப் பிள்ளைகள், Joseph Nicholas, Anita எனும் அன்பு மருமக்கள், Jude, Jeffrey, Maria, Zachary, Alexander, Nirusha, Leila எனும் பாசப் பேரப்பிள்ளைகள், Hannah எனும் அன்பு பூட்டியுடன் சுற்றம் சூழ இல்லம் நிறைந்த வாழ்வாக வாழ்வாங்கு கொண்டாள். வாரி வழங்கிய கொடைகள், கட்டற்ற அன்பு, முகமலர்ந்த சிரிப்பு, சளைக்காத விருந்தோம்பல், நகைச்சுவையுணர்வு, ஆழ்ந்த இறைபக்தி இன்னோரென்ன அவள் எமக்கென விட்டுச்சென்ற செல்வங்கள், நமக்களித்த ஆசீர்வாதங்கள். முன்மாதிரியாக கொண்டு வாழ எம்மை அழைப்பவை.

அன்னையே நீ என்றென்றும் இறைவனில் பேரின்ப வாழ்வின் நித்திய இளைப்பாறுதல் அடைவாயாக!

பிற அறிவித்தல்கள்

  1. 24 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 18 அக்டோபர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.