ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர்

வயது 8522 ஏப்ரல், 1934 – 14 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
மாதகல்
வாழ்ந்த இடம்
மாதகல்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து கிறிஸ்தோப்பர் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து இசெபெல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செபஸ்தியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரிறோசலின்(ஞானவதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிர்மலா சகாயராணி(சாந்தி- பிரான்ஸ்), அமலோற்பவகிறேஸ்(வசந்தி), அன்ரன் சத்தியசீலன், மரிய யூலியானா(சுமதி- இலங்கை), யூலியஸ் ஞானசீலன்(பிரான்ஸ்), மேரி கிறிஸ் ரீனா(தமயந்தி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருளானந்தம்(இராசையா), காலஞ்சென்றவர்களான கிறிஸ்றீனம்மா, சிறில்(இராசரத்தினம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரனி பெர்னாண்டோ(பிரான்ஸ்), றூபா, றெஜீனா, அன்ரன் பிறேமதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சூசைமுத்து, மரியாம்பிள்ளை, அகுஸ்தீன், சிங்கராசா, மாசிலாமணி, மரியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோந்திறின், ஸ்ரெபான், செபஸ்ரியன், றெஜி, றெஜிஸ்ரலா, ஜெசிக்கா, டினோத், சந்தோஸ், கெவின், கெவிஷா, லெபோன், கிறிஸ் ரீபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் புனிததோமையார் ஆலயத்தில் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து புனிததோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

உலகின் மூத்த குடியாம் தமிழ்க்குடி. அக்குடி அரசர்களின் வேடங்களை தரித்து திருவிழாக்களில் நடித்த ஒரு பாரம்பரிய நாட்டுக்கூத்து கலைஞரின் வாழ்க்கை வரலாறிது...

தமிழ் கூறும் நல்லுலகாம் யாழ்ப்பாணம் மாதகலையில் அந்தோனிமுத்து இசெபெல்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனாக கிறிஸ்தோப்பர் அவர்கள் 22/APR/1934ஆம் ஆண்டு பிறந்தார். அருளானந்தம், கிறிஸ்றீனம்மா, சிறில் போன்ற உடன்பிறப்புக்களுடன் ஓடி ஆடி வளர்ந்து வந்த இவர் தனது சுற்றத்தாரால் பாசமாக சிங்கராசா என அன்போடு அழைக்கப்பட்டார்.

முழுக் கதையையும் வாசிக்க

அள்ள அள்ள வளம் குன்றாத கடலிலிருந்து மின்பிடிக்கும் தொழிலை செய்து வந்த இவர், செபஸ்தியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியான மேரிறோசலின் என்பவரை மணமுடித்து இல்லற வாழ்வை சந்தோசமாக வாழ்ந்து வந்தார். நிர்மலா சகாயராணி, அமலோற்பவகிறேஸ், அன்ரன் சத்தியசீலன், வ்மரிய யூலியானா, யூலியஸ் ஞானசீலன், மேரி கிறிஸ் ரீனா போன்ற அன்பு பிள்ளைகளைப் பெற்று, நற்பண்புகளை போதித்து, அன்பாக வளர்த்தார்.

தனது பிள்ளைகள் திருமண வயதை எட்டியதும் அன்ரனி பெர்னாண்டோ, றூபா, றெஜீனா, அன்ரன் பிறேமதாஸ் போன்றவர்களை அவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்து, அவர்கள் பெற்ற செல்வங்களான சோந்திறின், ஸ்ரெபான், செபஸ்ரியன், றெஜி, றெஜிஸ்ரலா, ஜெசிக்கா, டினோத், சந்தோஸ், கெவின், கெவிஷா, லெபோன், கிறிஸ் ரீபன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் பாசத்தை பொழிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

புத்தகங்கள் வாசிப்பதையும், திரைப்படங்கள் பார்ப்பதையும், தினசரி நாளிதழ்களை படிப்பதையும் தனது அன்றாட பொழுதுபோக்காக கொண்டிருந்த இவர், அதிக பக்தி கொண்டு தேவாலயங்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். மேலும் உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் எதர்க்கும் அஞ்சாதவர்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என அன்பாக வாழ்ந்து வந்த இவர் 14.09.2019 இல் 85 வயதில் இந்த உலக வாழ்வை துறந்து இறைவனடி சேர்ந்தார்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.