ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனிபிள்ளை மரியதாஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிபிள்ளை மரியதாஸ்

வயது 777 பிப்ரவரி, 1942 – 7 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிபிள்ளை மரியதாஸ் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை, கிறேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரிமாசில்லா(மலர்), சறோஜினி, பத்மினி, குகதாஸ், வினோதினி, றஞ்சினி, அமுதினி யேசுதாசன், நிர்மலதாசன், கிருபைதாசன், தேவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பிமுத்து(சின்னையா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அன்ரனி(சந்திரன்), கிறேசியன்(வசந்தன்), றோச்(ஆனந்தன்), அனித்தா(டினா), கெஸ்ரன், ஸ்ரெலா(வதனா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மரியன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து யாழ். மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் 07/FEB/1942 இல் அந்தோனிபிள்ளை கிறேசம்மா தம்பதிகளின் அன்பு மகனாக மரியதாஸ் அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.

மேரிமாசில்லா, சறோஜினி, பத்மினி, குகதாஸ், வினோதினி, றஞ்சினி, அமுதினி யேசுதாசன், நிர்மலதாசன், கிருபைதாசன், தேவதாசன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் வாழ்வில் அன்பும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு உற்றார், உறவினர், நண்பர்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர் 07.09.2019 இல் 77 வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

"மரணம் விழித்து
எழக்கூடிய நித்திரை போன்றது
என்பதைத் தெளிவுபடுத்திய
எங்கள் இரட்சகரே
சுவாமி இவ்வுலக வாழ்வை
முடித்துக் கொண்டு
உமது திருப்பாதம்
நாடி வந்து சேர்ந்த
எங்கள் பாசத்திற்குரிய மரியதாஸ்
விண்ணகப் பேரின்ப வீட்டிலே
நித்தயமாய்க் களிகூர்ந்திருக்க
பிராத்திக்கின்றோம்"

பிற அறிவித்தல்கள்

  1. 6 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.