ஆறுதல்

மரண அறிவித்தல்

அந்தோனிப்பிள்ளை திரேசம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

அந்தோனிப்பிள்ளை திரேசம்மா

வயது 7625 மார்ச், 1943 – 9 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
மாத்தளன்
வாழ்ந்த இடம்
இரணைப்பாலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு மாத்தளனைப் பிறப்பிடமாகவும், இரணைப்பாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை திரேசம்மா அவர்கள் 09-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கபிரியேல், வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

செபமாலை மரியநாயகி, காலஞ்சென்ற மரியதாஸ், தேவதாஸ்(டென்மார்க்), புனிதசீலி(பிரான்ஸ்), அருள்மேரி, மேரியசிந்தா, மேரி யெனிற்றா(பிரான்ஸ்), யேசுதாஸ்(பிரான்ஸ்), நிறஞ்சலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிறகோரி, செபமாலை, மாகிறெற், லூர்த்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருமைநாயகம், ஆன்(டென்மார்க்), ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), அரியகுமார்(தபால் ஊழியர்), அருண், மோகன்(பிரான்ஸ்), விஜி(பிரான்ஸ்), லக்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மரிஸ்ரலா, யோகறஜீவன், தேவடிலுயன், டிலைக்சியா, டானியேல், ஸ்ரெவ்னி, றௌமியன், கிளைக்சன், மிதுரா, டில்சிகா, டிபான்சன், டிலைக்சியன், ஜதுசா, ஐஸ்லனா, டெவ்ரின், லுவ்ரினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பவிஸ்னா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-08-2019 சனிக்கிழமை அன்று மு.ப 03:00 மணியளவில் இரணைப்பாலை புனித பத்திமாதா தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஓப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இரணைப்பாலை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

முல்லைத்தீவில் உள்ள அழகிய இடமும் போரின் உச்சம் பெற்ற தாய் நிலமும் வடக்கே வங்கக் கடலும் தெற்கே நந்திக்கடலும் சூழ்ந்த அகலம் குறைந்த நீண்ட மணல் பரப்புக் கொண்டதும் கடலுணவு நிறைந்தும்,நெல்வயல்கள்,வீட்டுத்தோட்டம் என அழகிய மாத்தளனில் 25/MAR/1943 இல் திரு.திருமதி சூசைப்பிள்ளை அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளாய் திரேசம்மா அவர்கள் கிறகோரி, செபமாலை, மாகிறெற், லூர்த்தம்மா போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கபிரியேல் வெரோணிக்கா தம்பதிகளின் அன்பு மகனான அந்தோனிப்பிள்ளை என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக செபமாலை மரியநாயகி, மரியதாஸ், தேவதாஸ், புனிதசீலி, அருள்மேரி, மேரியசிந்தா, மேரி யெனிற்றா, யேசுதாஸ், நிறஞ்சலா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து அருமைநாயகம், ஆன், ரவிச்சந்திரன், அரியகுமார், அருண், மோகன், விஜி, லக்சன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து மரிஸ்ரலா, யோகறஜீவன், தேவடிலுயன், டிலைக்சியா, டானியேல், ஸ்ரெவ்னி, றௌமியன், கிளைக்சன், மிதுரா, டில்சிகா, டிபான்சன், டிலைக்சியன், ஜதுசா, ஐஸ்லனா, டெவ்ரின், லுவ்ரினா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், பவிஸ்னா எனும் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர்09.08.2019 இல் 76 வயதில் இரணைப்பாலையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் செபிப்போம்.

துயர் தோய்ந்த மண்ணில்
துயர் போக்கி வாழ்ந்து
அயராது உழைத்த அன்பு உயிரே
பயம் ஏதும் இன்றி
பல காலம் வாழ்ந்து
நிலையாகிப் போனீரே
நினைவெல்லாம் உம் சுவாசமாய்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.