மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின்
வயது 5325 மே, 1966 – 18 ஜூன், 2019
- பிறந்த இடம்
- இளவாலை போயிட்டி
- வாழ்ந்த இடம்
- Gelsenkirchen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Gelsenkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனற் மேகலா அஞ்சலோ றூபின் அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு திருமதி ஜீவம் பொனிபஸ் தம்பதிகளின் ஏக புத்திரியும், திரு திருமதி ஏபிரகாம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அஞ்சலோ றூபின் அவர்களின் அன்பு மனைவியும்,
பானு, அருண் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரதிரூபன், காவியா, அவந்திகா, வேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பயஸ், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மேவின், செல்வின், கிளற்வின், ராசகிளி, திருமகள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் இளவாலை போயிட்டியில் 25/May/1966 இல் திரு திருமதி.ஜீவம் பொனிபஸ் தம்பதிகளின் ஏக புத்திரியாக அன்ரனற் மேகலா அவர்கள் பயஸ், பிரபாகரன் எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி ஏபிரகாம் தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான அஞ்சலோ றூபின் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக பானு, அருண் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் மொழி, கலாச்சாரம் என ஜேர்மனியில் Bochum நகரில் ஆசிரியையாக தமிழ் கற்பித்தார், இவர் மாணவர்களை தனது தனித்த அன்பால் ஆர்வத்தை தூண்டி தமிழையும் கலையையும் வளர்த்து தமிழ்த்தாயாக விளங்கியதுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 18.06.2019 இல் 53 வயதில் ஜேர்மனியில் உள்ள Gelsenkirchen நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
இளவாலை மண் தந்த
.......இளமை உயிரே
வளமாக வாழ்ந்த
.......வள்ளல் மனமே
வாழ்வாங்கு வாழ்ந்து
....... உயர்ந்த உறவே
வீழ்ந்தீரே! மண்ணில்
.........விடிவெள்ளி ஆனீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

