மரண அறிவித்தல்

லூர்துமேரி அந்தோனிப்பிள்ளை
வயது 85
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்துமேரி அந்தோனிப்பிள்ளை அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலஞ்சென்றார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாட்டுக்கூத்து சக்கரவர்தி கலாநிதி பூந்தர் யோசப் எஸ்தர்ரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசப் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஞாநாநந்(துரை), மேரி அல்போன்சா, அனோசியா, பரமானந்தசத்தியசீலன், அக்கினேசியா, ஆன்றுசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிங்கநாயகம், கிளாறம்மா, இராசேந்திரம், அருளாநந்தம் மற்றும் ஞானப்பிரகாசம் நோபேட், லில்லி மாகிறேற் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செபரட்ணம், ஏக்கோன், றீற்ரா, செந்தில், பயஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரெவ்பன், யோகனா, ஜக்சன், டயானா, எஸ்தர், ரோனியா, ஜாபிஜாத், றோஜானா, அபிஷானி, கிஷானி, அஸ்மிதா, எகில்ஸ்டன், அனிஸ்டன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் 217 Bremen, kornstraße, Germany எனும் முகவரியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டி வளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணத்தில் 04/MAY/1934 ஆம் ஆண்டில் சூசைப்பிள்ளை சின்னையா இராசம்மா தம்பதிகளின் அழகுக் குழந்தையாக லூர்துமேரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பொன்னம்மா, சிங்கநாயகம், கிளாறம்மா, இராசேந்திரம், அருளாநந்தம், ஞானப்பிரகாசம் றோபேட், லில்லி மாகிறேற் போன்ற சகோதரங்களுடன் கூடி ஒன்றுபட்டு வளர்ந்து பெரியவளாகியதும், நாட்டுக்கூத்து சக்கரவர்தி கலாநிதி பூந்தர் யோசப் எஸ்தரம்மா தம்பதிகளின் அன்பு மகன் யோசப் அந்தோனிப்பிள்ளை எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் வம்ச விருத்தியாக ஞாநாநந்,மேரி அல்போன்சா, அனோசியா, பரமானந்தசத்தியசீலன், அக்கினேசியா, ஆன்றுசியா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து பெரியவர்களானதும் செபரட்ணம், ஏக்கோன், றீற்ரா, செந்தில், பயஸ் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து, ஸ்ரெவ்பன், யோகனா, ஜக்சன், டயானா, எஸ்தர், ரோனியா, ஜாபிஜாத், றோஜானா, அபிஷானி, கிஷானி, அஸ்மிதா, எகில்ஸ்டன், அனிஸ்டன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், சுவையான உணவுகள் செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 20.10.2019 இல் 85 வயதில் ஜேர்மனியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

