மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்பாக்குட்டி கந்தையா செல்வவிநாயகம்
முன்னாள் கரைச்சி தெற்கு ப. நோ. கூ சங்கக் கிளை முகாமையாளர், இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலய முன்னாள் தலைவர், தேர் திருப்பணிச்சபை செயலாளர், தர்மகர்த்தா
வயது 7930 நவம்பர், 1939 – 13 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- திருவையாறு, கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மேற்கு கஞ்சாம்பாதியைப் பிறப்பிடமாவும், கிளிநொச்சி 48/3 திருவையாறு, யாழ். கரவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி கந்தையா செல்வவிநாயகம் அவர்கள் 13-11-2019 புதன்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற வீரகத்தி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,
கனகாம்பிகை(அம்பி- கனடா), அம்பிகைபாகன்(செல்வன்- நெதர்லாந்து), கேதீஸ்வரன்(வரன்- கிளிநொச்சி), மோகனாம்பிகை(மோகனா- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற சிவகாமிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருளானந்தம், லிங்கலதா, செல்வரஞ்சினி, தயாளன், சுகுமாரன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பரமு, சிவராசா, விக்னேஸ்வரன் மற்றும் லோகேஸ்வரி சந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விமலராணி, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
துளசி, தனுஷ், அஸ்மிதா, சிந்தூரி, கேதாரகன், பபித்தா, கனிஷ்கவினோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

