மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அப்புத்துரை கனகரத்தினம்
வயது 7231 ஆகஸ்ட், 1947 – 28 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- ஏழாலை விழிசிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகம் கோட்டைகாட்டைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு விழிசிட்டியை வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை கனகரத்தினம் அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை சற்குணம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளயவி இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அரியமலர்(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,
வசந்தகுமார், வசந்தகுமாரி, சசிகுமார், உமாதேவன், அரியரட்ணம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் வரதலட்சுமி, இராசயோகம், ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாலசிங்கம், திலகவதி, இரத்தினம், தேவராசா, லலிதாதேவி, சுபாசினி, பவா, காலஞ்சென்றவர்களான சிங்கவடிவேல், இராசலட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விஜயநிர்மலா, ரகுநாதன், பத்மினி, ஸ்ரீரஞ்சினி, சாருத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாருகன், சாருகா, டினேஸ்காந், தர்மேஸ், நிவேதிகா, நிகிதன், மதிவர்மன், மதுசனா, தக்சயன், அரிசா, சாரவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ் .மல்லாகத்தில் புகழ் பூத்த சீமான் திரு.அப்புத்துரை அவர்தம் பாரியார் சற்குணம் அவர்களின் அருமைப் புத்திரனாக 31/AUG/1947 ஆம் ஆண்டில் திரு.கனகரத்தினம் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சண்முகலிங்கம் மற்றும் வரதலட்சுமி, இராசயோகம், ஸ்ரீதரன் போன்ற உடன் பிறப்புகளுடனும் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.திருமதி இளயவி இலட்சுமி தம்பதிகளின் அன்பு நிறைந்த மகள் அரியமலர்(கிளி) அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் நல் வாழ்க்கையின் பயனாக வசந்தகுமார், வசந்தகுமாரி, சசிகுமார், உமாதேவன், அரியரட்ணம் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து விஜயநிர்மலா, ரகுநாதன், பத்மினி, ஸ்ரீரஞ்சினி, சாருத் என்பவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சாருகன், சாருகா, டினேஸ்காந், தர்மேஸ், நிவேதிகா, நிகிதன், மதிவர்மன், மதுசனா, தக்சயன், அரிசா, சாரவ் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் கனகலிங்கம் எனவும் எல்லோராலும் அழைக்கப்படும் இவர் அன்பும் பண்பும் கொண்டு நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,பழைய இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் அத்துடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார்,
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 28.11.2019 இல் 72 வயதில் ஏழாலையில் உள்ள விழிசிட்டியில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
எங்கள் அன்புத் தந்தையே
விழிகளில் ஈரமாக தவிக்கிறோம்
விடை பெற்ற செய்தி கேட்டு கலங்கிறோம்
விடியலுக்காக கஸ்ரப்பட்ட நாள்கள் நிழலாட.....
கனத்த இதயமுடன் கணங்கள் கழிய....
.காவிய வீரனாக எம் மனங்களில் நிலைத்தீர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

